dc.description.abstract |
காலனிய, பின்காலனிய காலங்களினூடாக வளர்முக நாடுகள் உலகமயமாதலுக்கு உள்ளாக்கப்பட்டன. அவை தாமாகவே உலகமயமாதலுக்கு உள்ளாகியும் வருகின்றன. பொருளாதாரச் செயல் நிலையை அடிப்படையாகக் கொண்டதாக உலகமயமாதல் நிகழ்ந்திருந்தாலும் அது உலகநாடுகளை அவற்றின் அரசியல், சமூக, கலை, கலாசார, சமய, தத்துவ, பண்பாட்டுக்கூறுகளிலும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியது. இந் நாடுகளின் மொழி, சமயம், கலாசாரம் உள்ளிட்டவை நேரடியாகவும் மறைமுகமாகவும் இவற்றின் மீது திணிக்கப்படுகின்றது. பன்முகத்தன்மையற்ற ஒற்றைத்தன்மையான அடையாளங்கள் உருவாகின்றன. இது அதிகார ஆதிக்க அடிப்படையிலானதே தவிர மக்களை ஒற்றுமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டதல்ல. இந்தப் பின்னணியில் சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொவிட் - 19 வைரஸ் உலகெங்கும் பரவி அனைத்து நாடுகளையும் சுகாதார ரீதியாக முடக்கி அனைத்துவகையான நெருக்கீடுகளையும் கடந்த இரு வருடங்களாக ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள சமய வாழ்வில் உலகமயமாதற் பின்னணியில் உருவான கொரோனா வைரஸின் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கத்தை ஆய்வுக் கட்டுரை ஆராய்கின்றது. இதற்கு மாதிரியாக யாழ்ப்பாணம் நல்லூர்க்கந்தசுவாமியாலய 2020, 2021 காலப்பகுதித் திருவிழாக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வியலில் ஆய்வு முறையியல்களாக விவரண ஆய்வு, வரலாற்றுமுறை ஆய்வு என்பன பிரதான முறையியல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் - 19 பற்றிப் பல ஆய்வுகள் சுகாதார, பொருளாதார, அரசியல் சார்ந்து வெளிவந்துள்ள போதும் சமய அடிப்படையிலான தாக்கங்கள் பெரிதும் வெளிவரவில்லை. அந்த அடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரை உலகமயமாதற் செயற்பாட்டின் விளைவான கொவிட் - 19 இன் தாக்கத்தால் சமய வாழ்வில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்களை நல்லூர்க் கந்தசாமி ஆலயத் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கின்றது. |
en_US |