Abstract:
ஆன்மீக ஞானத்தில் சிறந்து விளங்கிய பலர் ஆன்மீக வாழ்விலே இலயித்து அவை பற்றிய பல அவ்வப்போது விஞ்ஞானம், கலை, கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்கள். பொருளாதாரம், அரசியல், பொறியியல் போன்ற அறிவு முன்னேற்றத்துடன் ஆன்ம முன்னேற்றத்தையும் இணைத்துக் கொண்டு போக முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். இன்று பிரத்தியட்ச உண்மையாக விளங்கும் விஞ்ஞானமானது எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் கலந்து விட்டதோ அதே போல் ஆன்மீக விழுமியங்களும் காலத்தால் அழிய முடியாதனவாய் அழிக்க முடியாதனவாய் செல்வாக்குப் பெறுகின்றன.