Abstract:
உலகு தழுவிய அறிவினை அதன் விளைவுகளான தகவலறிவு. தொடர்பாடல் பண்பாடு, ஆகியனவற்றை உலகளாவியன வாக்குவதற்கும் மக்கள் உறவையும் மானிட
முன்னேற்றத்தையும் வளர்ப்பதற்கும் மொழிபெயர்ப்பு அவசியமானதாகும். கிரேக்கக் கவிஞர்களுடைய செழுமையான கவிதைகளையும் சேக்ஸ்பியருடைய கவிநயமுடைய பாடல்களையும் பிறநாட்டு நல்லறிஞர் அறிவியல் தகவல்களையும் தமிழ்மொழியிலே அறிவதற்கு மொழி பெயர்ப்புத்தான் துணை செய்கின்றது. மொழி பெயர்க்கும் முயற்சிக்கு தமிழ் மொழிக்குப் புதியது அன்று.
"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோடணை மரபினவே'' என்று சூத்திரஞ் செய்துள்ளார்.