Abstract:
மேற்பரப்பு நீர்நிலைகளைத் தொலை உணர்வுத் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி துல்லியமாகப் படமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இவ் ஆய்வானது, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஓர் பகுதியான வலிகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. செய்மதி மற்றும் களவாய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணணிப் பகுப்பாய்வின் மூலம் மேற்பரப்பு நீர்வளங்களான நன்னீர்க்குளங்கள், உவர்நீர்த்தேக்கங்கள், வழுக்கையாற்று வடிநிலம் என்பன படமாக்கப்பட்டுள்ளன. சிறியதும் பெரியதுமாக 127 நீர்நிலைகள் இங்கு அடையாளம் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 0.4 நீர் நிலைகள் காணப்படுகின்றபோதும் ஆய்வுப் பகுதியினுள் நீர்நிலைகளின் பரம்பலில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.