Abstract:
இலங்கை இரு தேசங்களாகப் பிளவுபட்டு இருந்ததுடன் மூன்று இராச்சியங்களாகவும் காணப்பட்டன. இலங்கைத் தமிழர் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை பூர்வீகத்தாயகமாகக் கொண்டு தனியான தேசத்தவர்களாக வாழ்ந்து வந்தனர்.' 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கைப்பற்றி இப் பிரிவுகளை மூன்று இராட்சியங்களாக வேறாக நிர்வகித்து வந்தனர். குறிப்பாக ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களை தனியான நிர்வாக முறைமைக்குட்படுத்தியுள்ளனர்.' மேலும் ஒல்லாந்தர் காலத்தில் தமிழர் வேறான மொழி, கலாசாரம், பூர்வீகப் பிரதேசத்தை யுடையவர்கள் என்றும் இப்பிரதேசங்களை நிர்வகிப்பதற்கான சொத்துரிமை, விவாகம், முதிசம் போன்றவை தொடர்பாக நீண்ட பாரம்பரியங்களைக் கொண்டிருந்தனர்.' தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், புவியல் அமைவிடத்தினாலும் தனியான எல்லாவகையிலும் வேறுபட்ட மொழி, கலாச்சாரப் பண்பாட்டம்சங்களைக் கொண்ட தேசிய இனமாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கருக்கு இடமில்லை.