Abstract:
பெண்களுக்கு கல்வியூட்டுவதால் பெறக் கூடிய பொருளாதார மற்றும் சமூக நலன்கள் ஆண்களுக்கு கல்வியூட்டுவதை விடவும் பன்மடங்கு பரவல் விளைவுகள் கொண்டதாகும். எனினும் பெரும்பாலான வளர்முக நாடுகளில் இன்று வரை பெற்றோரும் சமுதாயமும் ஆண்களின் கல்வியில் முதலீடு செய்வதை விடவும் குறைவாகவே பெண்களின கல்வியில் முதலீடு செய்து வருகின்றனர். வளர்முகநாடுகளில் பெண்களின் கல்வி தொடர்பான தடைகள் பற்றியதாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்-குதவக் கூடிய கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்குரிய அணுகுமுறைகளை அடையாளம் காண்பதாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.