Abstract:
இக்கட்டுரையின் நோக்கம் வேறுபட்டதும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கதுமான மெய்யியற் புலங்களிலும், ஏனைய அறிவுசார் புலங்களிலும் 'அந்நியமாதல்' என்கிற எண்ணக்கரு பிரயோகத்திலும் நடைமுறையிலும் எவ்வாறாயிருந்ததென்பதனை நோக்குதலாகும். வரலாற்றில் மெய்யிலாளர்கள் இதனைச் சொல்லின் பொருள் பற்றியதோர் பிரச்சனையாகவும் நேர்வாகவும் (Fact) இனங்கண்டனர் காலங்காலமாக அந்நியமாதல் என்கிற எண்ணக்கருவினை பலதரப்பட்டதும் வேறுபட்டதுமான வியூகங்களில் மெய்யிலாளர்கள் எடுத்துக்கொண்டு ஒப்பிட்டும் தனியாகவும் ஆய்வு செய்தனர்.