dc.contributor.author | Ragunathan, M. | |
dc.date.accessioned | 2022-12-05T08:36:21Z | |
dc.date.available | 2022-12-05T08:36:21Z | |
dc.date.issued | 2000 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8701 | |
dc.description.abstract | மேற்குநாட்டவரின் ஆட்சியின் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்பட்ட நிலவுடைமை அமைப்பின் சிதைவினாலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் தோற்றத்தினாலும் ஆங்கில ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக்கல்வி, மேலைநாட்டு நவீன இலக்கிய அறிமுகம் முதலிய காரணங்களாலும் தமிழ் இலக்கியப் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்களின் விளைவாகவே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவல், சிறுகதை ஆகிய இரண்டையும் உள்ளடக்கி நிற்கும் புனைகதை (Fiction) என்னும் இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமானது. தமிழ்மொழியிலே முதன்முதலாக எழுதி வெளியிடப்பட்ட உரைநடை நவீனம் மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாய முதலியார் சரித்திரமே என்பது பொதுவான கருத்தாகும். 1879இல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகையில் 1885இல் சித்திலெப்பையினால் வெளியிடப்பட்ட அசன்பேயுடைய கதை என்னும் உரைநடை நவீனமே இலங்கையில் வெளிவந்த முதலாவது தமிழ் நாவலாகும் எனப் பலரும் கருதுவர். ஆனால் இதற்கு முன்னரே காவலப்பன் கதை என்ற மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856இல் வெளியிடப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை திரு.மு. கணபதிப்பிள்ளை கூறுகின்றார். ''எனினும் இந்நூல் இதுவரை கிடைக்காததால் இது பற்றி உடனடியாக எதுவும் கூறமுடியாத நிலையே உள்ளது. எவ்வாறாயினும் ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கியத்திற்கு சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாறு உண்டு என்பதில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | ஈழத்துப் புனைகதைகள் பற்றிய ஆய்வு முயற்சிகள் | en_US |
dc.type | Article | en_US |