Abstract:
இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், பயன்படாத இடங்களில் பெரிய கற்களைப்
ஆந்திரா ஆகிய மாநிலங்கள் திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியன பேசப்படும் பிரதேசங்கள் ஆகும். இவை மிக நீண்ட ஆனால் தனித்துவமான ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தினையுடையன. இதனைப் பழங்கற்காலந்தொட்டுக் காணப்படும் தொல்லியற் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. பழைய கற்காலத்தில் வேட்டையாடுபவனாக அலைந்து திரிந்தமனிதன் ஓரிடத்தில் நிரந்தரமாக வசித்து உணவு உற்பத்தியில் ஈடுபட்ட காலப்பகுதி புதிய கற்காலமாகும். இம்மாநிலங்களில் இதன்ஆரம்பம் கி.மு.3500 எனக்கொள்ளப் படுகின்றது. இக்கலா சாரத்தில் மையப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது கிடைத்த எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர் இன்று இங்கு வாழும் திராவிட மொழிகளைப் பேசுவோரின் மூதாதையினரே இவர்கள் என இனங்கண்டு கொண்டுள்ளனர்