Abstract:
இலங்கை பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந் தாலும் பண்பாட்டு வளர்ச்சியில் அது பாரதத்துடன் சிறப்பாக, தென்னிந் தியாவுடன் பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்பு கொண்டு வளர்ந்துவந்துள்ளது. ஆயினும் இலங்கையின் புராதன பண்பாட்டு வர லாற்றை ஆராய்ந்த பலரும் வடஇந்தியத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தென்னிந்தியத் தொடர்பை ஆராய்வதில் அதிக அக் கறை காட்டவில்லை. இதற்கு இலங்கையின் ஆதிகால வரலாற்றைக் கூறும் பாளி இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பகைமை நாடாகவும், வட இந்தியாவைப் பாரம்பரிய நட்புறவு கொண்ட பிரதேசமாகவும் கூறப்பட் டுள்ளமையே முக்கிய காரணமாகும். ஆயினும் அண்மைக்கால தொல் லியல், மானிடவியல், சமூகவியல் போன்ற ஆய்வுகள் வரலாற்றுக்கு முற் பட்ட காலத்தில் இருந்து இலங்கைக்கும் திராவிட மொழி பேசும் தென் னிந்தியப் பிரதேசங்களான இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்பவற்றிற்கும் இடையே நெருங்கிய கலாசாரத் தொடர்புகள் இருந்துள்ளன என்பதை நிரூபித்துள்ளன. இவற்றின் ஓர் அம்சமாகவே இக்கட்டுரையில் இலங்கை - ஆந்திர பௌத்த சிற்பக்கலை உறவு பற்றி ஆராயப்படுகின்றன.