Abstract:
ஈழத்தின் இன்றைய நவீன தமிழ் நாடக நெறி பெருமளவு பொது மக்கள் மத்தியிற் பிரசித்தமாகாவிடினும் தன்னளவில் அது பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு நாடகங்கள், மோடி நாடகங்கள், நடனத்தை உள்வாங்கிய நாடகங்கள் பரிசோதனை நாடகங் கள் என அது பன்முகப்பாடு கொண்டதாகவுள்ளது உலக அரங்கின் செழுமைகளைத் தமிழுக்கு இந் நவீன நாடகங்கள் அறிமுகம் செய்தன; செய்கின்றன. இன்றைய நவீன நாடகங்கள் சிலவற்றில் பலகலைக் கலவை களைக் காணுகிறோம். 'கூத்தின் ஆட்டங்கள், திரெஜெடியின் கோரஸ், கொமெடியின் அங்கவீச்சுக்கள். பிரெஃரின் தொலைப்படுத்தல் உத்தி ஆதி யன ஒன்று சேர்ந்து தனித்தனியே நிற்காமல் புதிய நாடக வடிவங்கள் ஆக்கப்படுகின்றன. ''1
இந் நவீன நாடக நெறியின் இயக்கு சக்திகளாக அமைபவை சமூக வர லாற்றுக் காரணிகளே. இன்றைய நவீன நாடக நெறியின் அடித்தளங்கள் ஆரம்பகால நவீன நாடகங்களே. நவீன நாடகங்களின் தோற்றம்பற்றிய அறிவு இன்றைய நாடக நெறிகளைப் புரிந்து கொள்ளும் திறவுகோலாகும். இக்கட்டுரை ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம் பற்றி ஆராய்கிறது.