Abstract:
இந்திய மெய்யியலில் அறிவைத் தரவல்ல பிரமாணங்களாகப் பத்துப் பிரமாணங்கள் எடுத்தாளப்படுவதுண்டு. பிரத்தியட்சம், அனுமானம், ஆப் தம், ஒப்புவமை, அருத்தாப்த்தி, அனுபலப்த்தி, இயல்பு, ஐதீகம், மீட்சி, சம்பவம் எனச் சுட்டப்பெறும். இப்பத்துப் பிரமாணங்களினை வேதவியாசகர் எடுத்தாள்வார். இதில் கிருதகோடி எட்டாகவும் வீரசைவர், பாட்டர். வேதாந்திகள் ஆறு ஆகவும் குறைத்து ஏற்று நிற்பர்.1 மேலும் பிரபாகரர் ஐந்து பிரமாணங்களையும் (மேற்சுட்டப்பட்ட முதல் ஐந்து பிரமாணங்கள்) நியாயவாதிகள் நான்கு பிரமாணங்களையும் சாங்கியர், சைவசித்தாந்திகள் மூன்று பிரமாணங்களையும் பௌத்தர், வைசேடிகர் இரண்டு பிரமாணங்களை யும் உலகாயதர் பிரத்தியட்சம் ஒன்றினையும் ஏற்பவர்களாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு தரிசனங்களின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப அவர்கள் ஏற்கும் பிரமாணங்களும் கூடிக்குறைந்தமைகின்றமை காணலாம்.
ஆப்தம் தவிர்ந்த ஏனைய பிரமாணங்களினை விரிவான வகையில் நோக் குகையில் அவற்றில் பிரத்தியட்சப் பிரமாணத்தின் செல்வாக்கினை அல்லது தாக்கத்தினை முற்றாக நாம் நிராகரித்து விட முடியாது. அனுமானம் கூட காட்சியளவையின் சில கூறுகளினைத் தன்னகத்தே கொண்டுள்ளதென்பது நுணுகி ஆராயுமிடத்து அறியற்பாலதே. அனுமானம் தரும் நியாயவாதத் தில் ஏதுவும் (Hetu) உபநயமும் (Upanaya) காட்சிப் பிரமாணத்தின் சார் பின்றிப் பெற்றதாகக் கொள்ள முடியாது.