DSpace Repository

பெண்களின் மேம்பாட்டில் தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலின் வகிபங்கு - கொழும்புத்துறை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Vajitha, T.
dc.contributor.author Vithuja, V.
dc.date.accessioned 2022-11-30T09:17:29Z
dc.date.available 2022-11-30T09:17:29Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8658
dc.description.abstract இலங்கையில் தும்புத் தொழிலின் நீண்ட வரலாறும் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தும்பு உற்பத்தி முறைமையும், உலக தும்புச் சந்தையில் இலங்கையை ஒரு முக்கிய தும்பு உற்பத்தி நாடாக நிலைநிறுத்தியுள்ளது. தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் பெண்களின் வகிபங்கினை இனங்காணுதலும் அது சார்ந்து அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிதலும் ஆய்வின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. ஆய்வின் வினாக்களாக ஆய்வுப் பிரதேசத்தில் பெண்கள் தும்புப்பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவதற்கான காரணிகள் எவை? தும்புப்பொருள் உற்பத்திக் கைத்தொழில் சார்ந்து பெண்களின் வௌ;வேறுபட்ட வகிபங்குகள் எவை? என்பனவாகும். சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் கலப்புமுறை ஆய்வு வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வினாக்கொத்து, பிரதான தகவல் வழங்குநருடனான நேர்காணல், குவிமையக் குழுக்கலந்துரையாடல் மற்றும் விடய ஆய்வுகள் மூலம் முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவ்வகையில் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பு (Pரசிழளiஎந ளுயஅpடiபெ ஆநவாழன) அடிப்படையில் 50 பெண்கள் ஆய்விற்கான மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வு ஒழுக்கவியலானது ஆய்வாளரால் ஆய்வின் அனைத்துக் கட்டங்களிலும் முறையாகப் பின்பற்றப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர்களின் தரவுகளின் விபரங்கள் இரகசியமான முறையில் பேணப்பட்டு தகவல் தருநர்களின் நம்பகத்தன்மை பேணப்படும் வகையில் ஆய்வு ஒழுக்கவியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட கணியம்சார் தரவுகள் சமூக விஞ்ஞான ஆய்வுகளிற்கான புள்ளிவிபரவியல் மென்பொதியின் (ளுPளுளு எநசளழைn 21) உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டடதுடன், பண்புசார் தரவுகள் கருப்பொருள் உள்ளடக்கப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் தும்புக்கைத்தொழிலினை மேற்கொள்கின்ற காலத்தின் அடிப்படையில் 18மூ சதவீதமானோர் சிறுபராயம் வரையும், 4மூ சதவீதமானோர் ஒரு வருட காலமாகவும், 16மூ சதவீதமானோர் மூன்று வருடங்களாகவும், நான்கு வருடங்களாகவும் சம எண்ணிக்கையில் தும்புக்கைத்தொழிலினை மேற்கொண்டுள்ளனர். 62மூ சதவீதமானோர் நான்கு வருடங்களிற்கு மேலாகத் தும்புக் கைத்தொழிலினை மேற்கொண்டுள்ளனர். வாழ்வாதாரத்தின் அடிப்படையினை மேம்படுத்துவதன் நோக்கோடு தும்புக் கைத்தொழிலினை மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். முயற்சியாளர்கள் பொருளிற்கான சந்தைக் கேள்வியினைக் கவனத்தில் கொள்ளாது தம்மால் இயன்ற உற்பத்தியினை செய்து வருவதால் விற்பனை கடினமாக உள்ளது. எனவே இந்த நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். பாரம்பரிய உற்பத்தி முறையினை விடுத்து நவீன உற்பத்தி முறைக்கு மாறுதல் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த அறிவினைக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும் போன்றன தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் தீராத மனக்குறைகள் மற்றும் அபிலாசைகளாகக் காணப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject உற்பத்தி en_US
dc.subject சந்தைப்படுத்தல் en_US
dc.subject தும்புக் கைத்தொழில் en_US
dc.subject பெண்களின் வகிபங்கு en_US
dc.title பெண்களின் மேம்பாட்டில் தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலின் வகிபங்கு - கொழும்புத்துறை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record