DSpace Repository

இலங்கையின் தேர்தல் முறைகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தடைகளும் வாய்ப்புகளும

Show simple item record

dc.contributor.author Thirusenthooran
dc.date.accessioned 2022-11-28T04:01:13Z
dc.date.available 2022-11-28T04:01:13Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8627
dc.description.abstract பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளமாகக் காணப்படுவது தேர்தல் முறைகள் ஆகும். இலங்கையில் 1910ஆம் ஆண்டு குறூ மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தின்படி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் வாக்குரிமை பெற்று நீண்ட காலத்திற்குப் பிறகு குறிப்பாக 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே பெண்கள் வாக்குரிமையைப் பெற முடிந்தது. அந்த வகையில் 1931ஆம் ஆண்டு அடலின் மொலமூரே (யுனநடiநெ ஆழடயஅரசந) முதலாவது அரசாங்க சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இலங்கையில் டொனமூர் காலத்தில் இருந்து பெண்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் இலங்கை அரசியலில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. 1978ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை எட்டுத் தேர்தல்கள் இடம்பெற்ற போதிலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கா மாத்திரமே நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பாராளுமன்ற, உள்ளூராட்சி மன்ற, மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் முக்கிய தேர்தல்களில் பெண்கள் போட்டியிடுவதும், போட்டியிட்டு வெற்றிபெறுவதும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பின்புலத்தில் இவ் ஆய்வானது இலங்கையின் தேர்தல் முறையின் பிரகாரம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டரீதியான தடைகளை இனங்காணல், தேர்தலின் போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொணர்தல், பெண்கள் கூடுதலான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான சிபார்சுகளை முன்வைத்தல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. ஆய்வுப் பொருளையும் ஆய்வு நோக்கத்தினையும் கருத்தில் கொண்டு கலப்பு ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் மரபுசார் சட்ட - நிறுவன முறையும் (டுநபயட- ஐளெவவைரவழையெட ஆநவாழன), மரபும் அறிவியலும் சார் வரலாற்று ஒப்பீட்டு முறையும் (ர்ளைவழசiஉயட-உழஅpயசயவiஎந ஆநவாழன) கவனத்தில் கொள்ளப்படுகின்றது. ஆழமான நோக்கில் பெண்கள் காலத்திற்கு காலம் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்கின்ற போதிலும் பெரியளவில் ஆர்வத்துடன் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. இதற்கு பிரதான அடிப்படை இலங்கை தேர்தல் முறைகளின் பலவீனங்களே ஆகும். இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கடுமையான நிபந்தனைகள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். அதேபோல பாராளுமன்றத் தேர்தலில் காணப்படும் கட்சிப் பட்டியல் முறை தவிர்க்கப்படுவதுடன் தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50 வீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும் விருப்பு வாக்கு முறை இல்லாமல் செய்யப்பட்டு பெண்கள் தேர்தலில் அச்சமற்ற உள்ளார்ந்த விருப்பத்துடன் போட்டியிடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதுதவிர சமூகமட்டத்தில் பெண்கள் விழிப்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்தல் நீரோட்டத்திற்குள் அவர்கள் முழுமையாக இணைக்கப்படுகின்ற போது சிறந்த அரசியல் கலாசாரமும் அரசியல் அபிவிருத்தியும் கட்டியெழுப்பப்படும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject தேர்தல் முறைகள் en_US
dc.subject பெண்கள் en_US
dc.subject வாக்குரிமை en_US
dc.subject அரசியல் en_US
dc.title இலங்கையின் தேர்தல் முறைகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தடைகளும் வாய்ப்புகளும en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record