Abstract:
ஜனநாயக செயற்பாடுகள் முக்கியம் பெற்றுள்ள நவீன உலகில், அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் தீர்மானம் செய்யும் நடவடிக்கைகளில் சமூகத்தில் உள்ள மக்கள் பங்கேற்றல் செயன்முறையே அரசியல் பங்குபற்றலாகும். அரசியல் பங்கேற்றலினை நிர்ணயிக்கும் காரணிகளாக அரசியல் சார் விருப்பம், சமூக சமய பொருளாதார பின்னணி, சமூக ஒன்றுதிரட்டல், கல்வி, அரசியல் நிலை, வயது, பால் நிலை என்பன தனிமனித மற்றும் சமூக அரசியல் பங்கேற்பதில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கிய காரணியாகும். இலங்கையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னரான சூழலில் பெண்களின் அரசியல் பங்குபற்றல் அதிகரித்துள்ள நிலையில் முசலிப் பிரதேசத்தில் முஸ்லீம் பெண்களின் அரசியல் பங்குபற்றல் பல்வேறு சவால்களுக்குட்பட்டதாக உள்ளது. முசலிப்பிரதேசத்தில் அரசியல் பங்கேற்பும் சவால்களும், அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இஸ்லாமிய நோக்கு நிலையில் ஆராய்வதுடன், பங்கேற்பை அதிகரிப்பதற்கான பொருத்தமான தந்திரோபாயங்களைப் பரிந்துரைத்தல் ஆகும். இவ் ஆய்வானது பண்பு சார்ந்த (ஞரயவெவையவiஎந ஆநவாழன) வடிவத்தினைக் கொண்டிருப்பதுடன், கருப்பொருள் பகுப்பாய்வு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குத் தேவையான தரவுகளாக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணலினை மையமாகக் கொண்ட கலந்துரையாடல், அவதானம் போன்றன மூலம் தகவல்கள் பெறப்பட்டன. இத்துடன் இரண்டாம் நிலைத் தரவுகளாக இந்தத் தரவுகளுக்கு வலுவூட்டும் வகையிலான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து தகவல்கள் பெறப்பட்டன. மேலும் நோக்கம் கருதிய மாதிரியடிப்படையில் 20 பங்குபற்றுநர்கள் தரவு சேகரிப்புக்காக தெரிவு செய்யப்பட்டனர். முசலிப்பிரதேசத்தில் முஸ்லீம் பெண்கள் அரசியல் பங்குபற்றலில் எதிர்கொள்ளும் சவால்களாக முஸý;லீம் பெண்கள் சார்ந்து சமய மற்றும் சமூக ரீதியாக தவறான பொருள் கோடல்கள், கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான மட்டுப்பாடுகள், பால்நிலைக் காரணிகள், வாய்ப்புக்கள் வழங்கப்படாமை, பழைமைவாத சிந்தனை, கலாசார தாக்கம் ரீதியான காரணிகள், எதிர்மறையான உளப்பாங்குகள், சமூக மற்றும் குடும்ப ஆதரவின்மை, கலாசார குடும்பம் சார்ந்த மட்டுப்பாடு, குடும்பப் பொறுப்புக்கள் மற்றும் சுமை, ஆணாதிக்கத்தன்மை, நிதி சார்ந்த பிரச்சினைகள், கல்வியறிவு உட்பட பல்வேறுபட்ட காரணங்கள் அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் பங்குபற்றலின்மையைக் காட்டுகின்றது. முடிவாக ஆய்வானது ஆய்வுப் பிரதேசத்தின் பொருத்தமான கருத்துக்களுக்கு விளக்கம் வழங்குதல், இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டை சமூகமயப்படுத்தல், தவறான பொருள்கோடல்களுக்கு தகுந்த கருத்துக்கள் ஊடாக நிறுவுதல், மார்க்க விளக்க வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், முஸ்லிம் பெண்கள் வீட்டில் இருத்தல் வேண்டும், பெண்ணிடம் அதிகாரமளித்தல் கூடாது, பெண் தலைமைத்துவம் கூடாது போன்ற தவறான அபிப்பிராயங்கள் கழையப்படல் வேண்டும். சமய அரசியல் பங்குபற்றலில் மகளிர் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தங்களது ஆர்வத்தையும் பெண்களுக்கான ஆதரவினையும் அதிகரித்தல், முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்குபற்றல் அதிகரிப்பதற்கான உள, சமூகக் கலாசார தடைகளை இனங்கண்டு இல்லாமல் செய்தல் போன்றன பலவற்றினைப் பரிந்துரைப்பதுடன், அரசியல் நடத்தை சார்ந்த அபிவிருத்தியுடன் தொடர்பாக எதிர்காலத்தில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட முன்மொழிகின்றது.