Abstract:
ஆய்வுப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நிறுவனம்
சார்பிரச்சினைகளை இனங்காணும் வகையில் இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன்
கல்வி வலயதில் கோட்டம் 1 இற்குரிய 10 பாடசாலைகள் படைகொண்ட மாதிரியெடுப்பின்
மூலம் தெரிவு செய்யப்பட்டது. ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து
அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களிடம் இருந்து நேர்காணல் மூலமாகவும், 50
பெண்ணாசிரியர்களிடம் இருந்து வினாக்கொத்து மூலமாகவும், பாடசாலைகள்,
வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும்
தகவல்கள் திரட்டப்பட்டன. அவை புள்ளிவிபரவியல் நூற்றுவீத அடிப்படையிலும், 5
புள்ளிகள் லைக்கேற் அளவுத்திட்டத்திலும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நிறுவன ரீதியில் காணப்படும் பால்நிலை வேறுபாடு, பெண்ணாசிரியர்களின் கருத்துக்கள்
குறைந்தளவில் உள்வாங்கப்படுதல், ஆசிரியர்களின் லீவு, நேரமுகாமைத்துவம்
பேணுவதில் இடர்பாடு, வகுப்பறைக் கவின்நிலையை மேம்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்
என்பன கண்டறியப்பட்டன. நிறுவன ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்
பெண்ணாசிரியர்கள் மனவழுத்தத்திற்கு உள்ளாகுதல், குறித்த வயதிற்கு முன்பாகவே
ஓய்வு பெற முட்படுதல், உளவியல் பிரச்சினைகள், வினைத்திறனான கற்றல் கற்பித்தலை
மேற்கொள்ள முடியாமை, தொழில் திருப்தியின்மை ஏற்படல் போன்ற எதிர்மறையான
நிலைமைகளுக்கு உட்படுவதையும் கண்டறிய முடிந்துள்ளது. பெண்ணாசிரியர்களை
21ம் நூற்றாண்டின் திறன்களுக்கு ஏற்ப மாற்றும் வகையிலான பயிற்சிகளை வழங ;குதல்,
பால் வேறுபாடின்றி கடமைகளையும், பொறுப்புக்களையும் பகிர்ந்தளித்தல், வெகுமதிகள்,
பாராட்டுக்களை வழங்குதல், சிறந்த கற்றல் கற்பித்தலுக்கான வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்தல், நிறுவனம் சார் செற்பாடுகளில் ஈடுபட வைத்தல் என்பவற்றின் மூலம் இப்
பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.