DSpace Repository

முன்கட்டிளம் பருவத்தினரின் சுயமதிப்பீட்டில் பால்நிலை வேறுபாடுகளும் அதனுடன் தொடர்புபட்ட காரணிகளும்- வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Nikshika, S.
dc.contributor.author Menaha, S.
dc.date.accessioned 2022-11-21T07:38:36Z
dc.date.available 2022-11-21T07:38:36Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8593
dc.description.abstract பால்நிலை என்பது ஆண்கள், பெண்கள் எவ்வாறு தமது பாலுக்குரிய நடத்தையுடன் இருத்தல் வேண்டும் என்பது தொடர்பான சமூக பண்பாட்டு கலாச்சாரமே ஆகும். இப் பண்பாட்டு எதிர்பார்பானது முன் கட்டிளம் பருவ மாணவர ;களின் சுயமதிப்பீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. எனவே தான் இவ் ஆய்வானது முன் கட்டிளமைப் பருவத்தினரின் சுயமதிப்பீட்டில் பால்நிலை வேறுபாடுகளினை அளவீடு செய்வதனையும் அதனுடன் தொடர்புபட்ட காரணிகளினை இணங்காணுவதனையும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வுப் பிரதேசமாக வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் மாதிரிகளாக இப்பிரதேசத்தில் உள்ள முன்கட்டிளம் பருவத்தினருள் 176 மாதிரிகள் எளிய எழுமாற்று அடிப்படையில் ஆய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆய்வுக்கான தரவுகள் ஆய்வாளனால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து மற்றும் Rosenberg self-esteem scale பயன்படுத்தி சேகரிக்கப்பட்டுள்ளன. பால்நிலையுடன் தொடர்புபட்ட காரணிகளினை இணங்கான வினாக்கொத்தும் முன் கட்டிளம் பருவத்தினரின் சுயமதிப்பீட்டில் பால்நிலை வேறுபாடுகளினை அடையாளம் காண Rosenberg self-esteem scale பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதற்காக சமூக விஞ்ஞானங்களுக்கான புள்ளிவிபரவியல் மென்பொதி- 21 பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரணப்புள்ளிவிபரவியல் மற்றும் t-test, ANOVA போன்ற புள்ளிவிபரவியல் சோதனைகள் ஆய்வின் நோக்கினை அடைவதற்குப் பயன்பட்டுள்ளன. இதன் முலம் பெற்றக் கொண்ட ஆய்வின் முடிவுகளாக முன் கட்டிளமைப் பருவத்தினரின் சுயமதிப்பீடு அதிகமாக சாதாரண தரத்திலேயே காணப்படுகின்றது, முன் கட்டிளமை பருவத்தினரின் சுய மதிப்பீட்டில் பால்நிலை வேறுபாடுகள் காணப்படுகின்றன, (P-.000) முன்கட்டிளமைப்பருவத்தினரின் சுய மதிப்பீட்டின் பால்நிலை வேறுபாட்டில் குடும்பம் (P-.044), சமயம் (P-.003) மற்றும் வயது (P-.010) தொடர்புபட்டுள்ளது.. எனவே முன்கட்டிளம் பருவத்தின் சுயமதிப்பீட்டினை அதிகரிப்பதில் பால்நிலைச் சமத்துவத்தின் அவசியத்தினை இவ்ஆய்வு வலியுறுத்தி நிற்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject சுயமதிப்பீடு en_US
dc.subject பால்நிலை en_US
dc.subject முன் கட்டிளமைப்பருவம் en_US
dc.title முன்கட்டிளம் பருவத்தினரின் சுயமதிப்பீட்டில் பால்நிலை வேறுபாடுகளும் அதனுடன் தொடர்புபட்ட காரணிகளும்- வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record