Abstract:
இலங்கையிலே இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் 1966ஆம் ஆண்டி லிருந்து தனியாக ஆரம்பிக்கப்படலாயின. விவசாய அமைச்சும் காணி நீர்ப்பாசன அமைச்சும் கூட்டாக இணைந்து இக்குடியேற்றத் திட்டங்களைத் தோற்றுவித்தன. இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் முக்கியமாக மூன்று நோக்கங்களை நிறைவேற்றுதற்பொருட்டு மேற்கொள்ளப்பட்டன.
1. நாட்டிலே பெருகி வருகின்ற படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு விவசாயத் துறையில் வேலைவாய்ப்பளித்தல்.
2. அதிக வருமானத்தை அளிக்கவல்ல பயிர்ச்செய்கையை மேற்கொள் ளும்படி இளைஞரைத் தூண்டுதல்.
3. இளம் விவசாயிகளை உள்ளடக்கிய கூட்டுறவுச் சமுதாயமொன்றினை உருவாக்குதல், 1
அதிக உற்பத்தி, உயர்ந்த வருமானம் ஆகிய இரு இலக்கையடை வதற்கு உயர்ந்த வருவாயைத் தரவல்ல பயிர்வகைகளைத் தேர்ந்து பயி ரிடுவதும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதும் அவசியமாகும். மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, மரக்கறிவகை, பழவகை போன்ற உப உணவுப்பயிர்களும் தேயிலை, கறுவா, தென்னை, புகையிலை போன்ற தோட்டப்பயிர்களும் அதிக வருமானம் அளிக்கவல்ல பணப்பயிர்களாகும். ஓரளவு இயந்திரப் பாவனை, நீர்ப்பாசனம், திருந்திய செய்முறை என்பன நவீன தொழில் நுட்பங்களாகும். அத்துடன் திட்டத்தில் இளைஞர் ஒரு சமூகமாக வாழ்ந்து, கூட்டாக நில அபிவிருத்தி செய்து, கூட்டுறவு நிறு வனங்களை உருவாக்குதல் கூட்டுறவுச் சமுதாயத்தை உருவாக்குதலாகு மெனத் திட்ட நோக்கம்பற்றி மேலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டங்கள் பகுதி பகுதியாகப் பல படிநிலைகளில் அபிவிருத்தி செய் யப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் கூட்டாக நிலத்தைத் திருத்தி உற்பத்திக் குகந்ததாக்குவதும், பாதைகள், வாய்க் கால்கள் அமைப்பதும் அபிவிருத்தி வேலையின் முதற்பகுதியாகும். வீடுகள் அமைப்பதும், இளைஞர் குடும்பத்தினராக மாறுவதும் இரண்டாவது அபிவிருத்தியாகும். முன்றாவது பகுதியாகக் கூட்டுறவுக் கட்டிடம், சேமநல நிலையம், உரப்பசளைக் களஞ்சியம், வைத்தியசாலை போன்றவற் றுக்குக் கட்டிடங்கள் அமைத்தல் அமையும்.