dc.description.abstract |
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியின் தரத்தினை அப்பிரதேசத்தின் இயற்கை வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனைக் கணிப்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இயற்கை வளங் களில் நில வளமும் ஒன்றாகும். குறித்த ஒரு பிரதேசத்தின் நிலவளம் அதன் உச்சப்பயனைப் பெறத்தக்க வகையில் பயன்படுத்தப்படுகின்றதா, அல்லது ஒரு குறித்த பயன்பாட்டிற்கு உட்பட்டிருக்கும் நிலம் அப்பயன்பாட்டிற்குப் பொருத்தமானதா, இப்பயன்பாட்டினைவிட வேறு சிறந்த பயன்பாட்டிற்கு அந்நிலத்தை உட்படுத்த முடியுமா, போன்ற வகையில் ஆய்வுகள் செய்யப் பட்டு நில வகைகள் பயன்படுத்தப்படல் வேண்டும். தன்னிச்சையான நிலப் பயன்பாட்டு முறை நீக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான முறையில் நிலப் பயன் பாட்டுத் தெரிவுகள் இடம் பெறல் வேண்டும். இச்செயன்முறை இடம் பெறுமிடத்து, பிரதேச அபிவிருத்தி மேம்பாடு உயர்நிலையில் இருக்கும். இக்கட்டுரையில் “பொருத்தமான நில (விவசாய) வகைப்பாடு' (Terrain [Land] Suitability Classification) எவ்வாறு மேற்கொள்ளப்படலாம், அதன் செயன்முறைகள் என்பன நோக்கப்படுகின்றது. பயிர் வகைகளுக் கான பௌதீக சூழல் கட்டுப்பாட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக் கப்படுகின்றது. பொருளியல், சமூக அம்சங்கள் இப்பாகுபாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை முதலிலேயே குறிப்பிட விரும்புகின்றேன். நிலமும், நில வகைப்பாடும்
நிலப்பொருத்த வகைப்பாட்டின் முதலாவது படிமுறை நிலத்தின் பௌதீகத் தன்மைக்கு ஏற்ப நிலத்தினை வகைப்படுத்தலாகும். பிரதேசத்தின் தரைத்தோற்றப் பண்புகள் நுட்பமானதாக ஆராயப்பட்டு 'நிலவகைகள்’ (Land types) வகைப்படுத்தல் வேண்டும். இதில் குறித்த பிரதேசத்தின் புவிச் சரிதவியல் (Geology), புவி மேற்பரப்பியல் (Geomorphology), மண் வகை (Soil types), தாவர வகை (Vegetations), வடிகால் (Drainage) என்பன முக்கியமாக ஆராயப்பட வேண்டும். ஏனெனில், பாறைகள், அதன் அமைப்பு, சாய்வுவகை, மண்வகை, வடிகால்கள் என்பன எல்லாம் வேறுபட்ட நில வகைகளை உருவாக்குவதற்குக் காரணிகளாக இருக்கின்றன. இவ்வகையில் குறித்த பிரதேசமொன்றின் 'நிலவகை'களின் பண்புகளை அறிந்து பாகுபடுத்துதல் 'நிலப்பொருத்தப் பாகுபாட்டிற்கு' மிக இன்றி யமையாதன. |
en_US |