dc.contributor.author | Ganapathipillai, A. | |
dc.date.accessioned | 2022-11-21T05:50:15Z | |
dc.date.available | 2022-11-21T05:50:15Z | |
dc.date.issued | 1985 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8570 | |
dc.description.abstract | உலகில் இருப்பான பயிர்ச் செய்கை காணப்பட்ட இடங்கள் நீர்ப்பாச னத்திலும் அதன் அபிவிருத்தியிலும் கூடிய கவனம் செலுத்திவந்திருந்த பிரதேசங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. நீர்ப்பாசனத்தை அடியொற்றி யமைந்த விவசாயத்தினதும் விவசாய அபிவிருத்தியினதும் வரலாறு திகதி யிட்டுக் குறிப்பிட முடியாத வரலாற்றுப் பழைமை வாய்ந்ததாகக் காணப்படு கிறது. குறிப்பாக நதிக்கரை நாகரீகங்களின் தோற்றத்துடன் நீர்ப்பாசன அபிவிருத்தியின் முதலாவது காலகட்டம் தொடங்கிற்று எனலாம். எவ் வெவ் வழிகளில் நீர் கிடைக்கப் பெற்றாலும் அதனைப் பயிர்ச் செய்கையின் பொருட்டு வயல்களுக்கு அனுப்பும் செயலையே நீர்ப்பாசனம் எனக் குறிப் பிடலாம். இத்தகைய செயற்பாடுகளின் சிறப்புத் தேர்ச்சியும் அவற்றில் தொழில்நுட்ப அறிவுப் பிரயோகமும் அவற்றின் விளைவாகக் பெறுவதான நீர்ப்பாசனத்தினைப் பெறும் வயற்பரப்பு அதிகரிக்கப்பட்டு வருவதும் அவ்வாறு வழங்கப்பட்ட நீரின் உற்பத்தித்திறன் அதிகரித்து வரு வதும் ஆகிய நடவடிக்கைகளின் ஒன்றிணைந்த செயற்பாடே நீர்ப்பாசன அபி விருத்தி எனக் கொள்ளப்படுகிறது. எனவே நீர்ப்பாசன அபிவிருத்தியினை அளவிடும் ஒவ்வொரு குறிகாட்டியும் மனித சமுதாய அபிவிருத்தியுடன் மிக நெருங்கிய குறிகாட்டியாகவே இருந்துவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதிலிருந்து அபிவிருத்திக் கருதுகோள் தனி ஒரு அம்சத்தினை மாத் திரம் கவனத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை என்ற கருத்து இங்கும் வலியு றுத்தப்படுவதனை நோக்க முடிகிறது. இவற்றின் பின்னணியில் இக்கட்டுரை இலங்கையில் நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த வரலாற்றுடன் இணைந்த நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதாக மட்டுமே அமைகிறது. இலங்கையின் நீர்ப்பாசன அபிவிருத்தியின் ஆரம்ப எண்ணக்கரு விஜய னின் வழித்தோன்றலாகிய பந்துவாச (Panduwasa) மன்னன் கி. மு. 504இல் முதலாவது அணையினைக் கட்டி முடித்ததாக நம்பப்படும் காலப் பகுதி யிலிருந்து தொடங்குகிறது (Gunasekera, S.de 1957). அதேவேளை பெரிய நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் கி.மு.400க்கும் கி.பி 1200க்கும் இடைப் பட்ட காலப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. இக்காலகட்டத்தின் கடைசி மன்னனாகப் பராக்கிரமபாகு விளங்குகிறான். இந்நாட்டில் பெறப் படும் மழை நீரில் ஒரு துளியாவது வீணேசென்று கடலில் கலப்பதனைத் தடுத்து, சேமித்து நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கையுடன் பராக்கிரம சமுத்திரம் (Sea of Parakrama) என்ற குளத் தினை நிர்மாணித்திருந்தான். இத்தகைய வியத்தகு நீர்ப்பாசன ஒழுங்கு இன்றும் ஆச்சரியப்படத்தக்க அபிவிருத்திப் பணியாகக் கொள்ளப்படுகிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | இலங்கையின் நீர்ப்பாசன அபிவிருத்தியில் வரலாற்றுச் சிறப்பம்சங்கள் | en_US |
dc.type | Article | en_US |