dc.description.abstract |
உலகில் பல்வேறு மொழிகளில் தன்மைப்பன்மை அமைப்பு இரு வகை யாக அமைந்துள்ளது. ஒன்று உளப்பாட்டுத் தன்மைப்பன்மை; மற்றது உளப்படுத்தாத தன்மைப்பன்மை. இவற்றை ஆங்கிலத்தில் முறையே First Person inclusive Plural' எனவும், 'First Person exclusive Plural' எனவும் கூறுவர். உளப்பாட்டுத் தன்மைப்பன்மை என்பது கேட்போரை உளப்படுத்திக் கூறுவது, மற்றது கேட்போரை நீக்கித் தன்னைச் சார்ந் தோரை மட்டும் உளப்படுத்துவது. எடுத்துக்காட்டாக இந்தியத் தமிழில் 'நாம்', 'நாங்கள்' ஆகிய இரண்டையும் காட்டலாம்.
இவ்விரட்டைத் தன்மைப்பன்மை அமைப்புப்பற்றி மேலைநாட்டு அறி ஞர்கள் கூறியதை முதற்கண் சற்று நோக்குவோம்.
இவ்விரட்டைத் தன்மைப்பன்மை அமைப்புப்பற்றி 1560ஆம் ஆண்டு தொடக்கம் மேலைநாட்டு அறிஞர்களாகிய டுமின்கோ டீ சன்ரோ ரோமஸ் (Dumingo de Santo Toma's), கொன்சலஸ் கொல்குயின் (Gonza les Holguin), ரொறெஸ் றுபியோ (Torres Rubio), கிலிஜ் (Gilij), டுபொன்சூ (Duponceau). பிக்கறிங் (Pickering), கம்போல்ட் (Humboldt), ஸ்கூல் கிறாப்ட் (Scholl Craft} கலட்டின் (Gallatin), றம்புல் (Trumbull), போஸ் (Boas) ஆகியோர் தமது கட்டுரைகளிலும் நூல்களிலும் குறிப்பிட்டுள்ளனர். |
en_US |