Abstract:
இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் முக்கிய இரு பிரிவினரான இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர் இடையிலான உறவுகள் பற்றிச் சிறப்பாக இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தெளிவான கருத்துக் கள் காணப்படாதுள்ளன. இத்தீவின் இருபெரும் சிங்கள, தமிழ் சமூகங் களுக்கிடையிலான மோதல்கள் இனப்பிரச்சினை என்ற வடிவத்தில் கூர்மை யடைந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் இச்சூழ்நிலை யில் தமிழ்பேசும் மக்களின் முக்கிய இரு பிரிவுகளிடையே காணப்படும் உறவுகளை ஆராய்ந்து விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வுறவுகள் பற்றிய ஆய்வில் இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித் துவப்படுத்திய பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் நடவடிக்கை களும், இந்திய வம்சாவளித் தமிழரின் பிரதான அமைப்பான இலங் கைத் தொழிலாளர் காங்கிரசின் செயற்பாடுகளும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த வருடமாகிய 1948இலிருந்து 1977 பொதுத் தேர் தல்வரையுள்ள காலப்பகுதி இவ்வுறவுகள்பற்றிய ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1977இன் பின்பான காலப்பகுதி இவ்வுறவுகளில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டி நிற்பதால் தனியாக நோக்குதற்குரியது. இவ்விரு பிரிவினரும் இனம், மதம், மொழி, பண் பாடு, கலாச்சாரம், வரலாறு இவைகளினால் ஒற்றுமைப்பட்டிருந்தாலும் புவியியல் அமைவிடம், தொழில் முறைகள், பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள் தத்தம் தனித்துவமான கலாசாரப் பண்புகள் அரசியல் நட வடிக்கைகள், கல்வி நிலை போன்ற துறைகளில் வேறுபட்டுக் காணப்படு கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக இலங்கையில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருப வர்களின் குடியினராக இலங்கைத் தமிழரைக் குறிப்பிடலாம். இலங்கை வாழ் சிங்கள மக்களைப் போலவே இவர்களும் இந்நாட்டின் சுதேசக் குடி யினராகக் காணப்படுபவர். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்க ளில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருபவர்கள். இவர்களுள் குறிப் பிடத்தக்க தொகையினர் இலங்கையின் ஏனைய பாகங்களில் தம்பொருளா தார நடவடிக்கைகளின் நிமித்தம் வாழ்ந்துவருகின்றனர். ஒப்பீட்டடிப் படையில் அவர்களது சமூக, சமூக, பொருளாதார அபிவிருத்திகள் இந்திய வம்சாவளித் தமிழர்களது அபிவிருத்திகளிலும் மேம்பட்டவையாகவே இருந்துள்ளன.