Abstract:
நவீன காலத்தில் ஒவ்வொரு அரசாங்கங்கள் அல்லது தனிப்பட்ட நிறு வனங்கள் விஞ்ஞான ரீதியாக மக்களதும் அவர்கள்தம் பொருளாதாரநிலை, சமூகப் பண்புகள் ஆகியனவற்றினை ஒட்டுமொத்தக் கணிப்பாக மேற் கொள்வதையே குடிக்கணிப்பு எனக் கொள்ளலாம். இக்கணிப்புமுறை உல கில் புராதன காலத்தில் வளர்ச்சியடைந்த சமூகங்களை உள்ளடக்கிய அரசு களினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. கணிப்பு (Census) என்ற பதம் இலத்தீன் மொழியில் Censere எனவும் றோமன் மொழியில் Censor எனவும் அழைக்கப்பட்டது. அக்காலங்களில் மக்கள் சம்பந்தமான பதிவேடுகளைத் தயாரித்திருந்தனர். அதாவது மக்கள் நிலை, அவர்கள்தம் சொத்துடமை ஆகியவற்றை ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருமுறை கணிப்பிடப்பட் டடது. ஏனெனில் வரி அறவிடல், இராணுவ சேவைகளுக்காக ஆண்களது எண்ணிக்கை ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதே அதன் நோக்கமாகவிருந்தது.