dc.description.abstract |
‘அசை’ (Syllable) என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் இது வரை கொடுக்கப்படவில்லை. ஒலிகளின் பௌதீக பரிமாணங்களின் அடிப் படையில் அசைகளை நிரூபிக்க முயன்ற முயற்சிகளும் தோல்வியில் முடிந் துள. கருவிகள் மூலம் ஒலிகளை ஆராய்ந்த ஒலியியலாளர்களாலும் அசை களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
"ஒலிப்பதிவுகளை, படங்களில் உள்ள அருகருகே அமைந்த உச்சிகள் அடிப்படையில் அசைகள் தீர்மானிக்கப்படமுடியாது" (ஸ்கிறிப்ஸர், 1927). இருதயத்துடிப்பு அடிப்படையில் அசைகள் கூறுகளாகக் கணிக்கப்படலாம் என ஸ்ரெற்சன் கூறினார். புளும்பீல்ட் (1933: 120), பைக் (1943: 116- 117), ஜோன்ஸ் (1957: 56). கொக்கெற் (1958: 99 - 100), கிளீசன் (1961: 258) போன்றோர் நாடித்துடிப்பை அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்ட நிறையோசை அடிப்படையில் அசைகளை இனங்காணலாம் எனக் கூறினர்.
சங்கிலித் தொடராக அமைந்துள்ள பேச்சை அசைகளாக வகுப்பதற் குப் பல பிற அம்சங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும். உதா ரணமாக, கவனமான பேச்சு விரைவான பேச்சைவிட அசைகள் கூடுத லாகக் கொண்டது (றூட், 1976) . அமெரிக்க ஆங்கிலத்தில் I am going to Buffalo என்பதை ஆறுதலாகப் பேசினால் ('ae em-gou - in - tiu - bof-9- lou) என 8 அசைகளையும் விரைவாகப் பேசினால் (ng 0 wn- t' b'af - lǝ' ) என 3 அசைகளையும் உடையதாகக் காணப்படுவதாக றூட் கூறுகிறார். |
en_US |