Abstract:
தகவல் தொடர்பாடலில் தமிழ் எனும் தலைப்பினுள் பின்வரும் துறைகள் ஆய்வுக்குட் பட வேண்டியனவாக அமைகின்றன. அஞ்சல் சேவைகள், தொலைத்தொடர்பூட்டல் சேவை கள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஊடான சேவைகள் என்பனவே அவையா கும். மேற்படி சேவைகள் தகவல்களை பரிவர்த்தனை செய்பவை. இலங்கையில் சிறுபான்மையோர் பேசும் மொழியான தமிழ்மொழியினை பிரயோகிப்பதில் என்ன நிலைகளிலும் நிலைமைகளிலும் இச்சேவைகள் இருந்தன,இருக்கின்றன, இருக்க வேண்டும் என்பதை இவ் ஆய்வு ஓரளவு பரிசீலனை செய்ய முயல்கிறது.
மேற்படி ஆய்வுக்குரிய தரவுகள் வெளி யிடப்பட்ட நூல்கள், கட்டுரைகள், அறிக்கை களில் இருந்தும் கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியும் பெறப்பட்டன. கள ஆய்வினால் பெறப்பட்ட தகவல்கள், தரவுகள் என்பன எழுமாற்று வகைமாதிரியில் அமைந்த பேட்டிகள் மூலம் பெறப்பட்டவை யாகும்.