Abstract:
மாணவரது கல்வி அடைவானது பாடசாலைகளில் கிடைக்கப்பெறும் வளங்களி னாலும், மாணவனது குடும்பப் பின்னணி, பொருளாதாரவளம், தனியாள் வேறுபாடு
போன்ற பல்வேறு காரணிகளினாலும் தாக்கம் பெறுகின்றது. இலங்கைப் பாடசாலை களைக் கருத்தில் கொள்ளும் போது அவை ஐந்து வகைகளாக தேசிய பாடசாலை, 1 AB, 1C, 2, 3 பிரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். ஒரே வகையான பாடசாலைகள் தானும் அவை கொண்டுள்ள வளங்கள் தொடர்பாக ஏதோ ஒரு வகையில் வேறுபட்ட வையாகக் காணப்படுகின்றன. இதனால் எந்தப் பாடசாலைகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் பொதுத் தேர்வுப் பெறுபேறுகள் ஒரே சீராக அமைவதில்லை. எனவே, பாடசாலை வளங்கள் மாணவரது கல்வியில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்றும், இவ்வளங்களை மாணவரது அடைவு நோக்கி எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது.