Abstract:
பா டசாலை நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி தொடர்பான சில பிரச்சினைகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வு, கிடைக்கக்கூடிய தகவல்களையும் சில தனிப்பட்ட அவதானிப் புகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடக்கநிலை முயற்சியாகும். முழுமையான புள்ளிவிபரங்களையும் கள ஆய்வையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு முயற்சி பின்னர் மேற்கொள்ளப்படும். அவ் வகையில் இக்கட்டுரையில் கூறப்படும் கருத்துகள் இறுதியான கருத்துக்களல்ல என்பது மனங்கொள்ளத்தக்கது. முஸ்லிம் களும் கல்வி மொழியும் ஒரு வரலாற்றுப் பின்னணி, சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர் பற்றிய பகுப்பாய்வு. கல்விமொழி மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணிகள், கல்விமொழி மாற்றத்தினால் ஏற்படும் கல்விப் பிரச்சினை, கல்வி மொழி மாற்றத்தினால் ஏற்படக்கூடிய எதிர்கால சமூக விளைவுகள் ஆகிய ஐந்து உப தலைப்பு களில் இப்பிரச்சினை இங்கு ஆராயப்படுகிறது.