Abstract:
தொலைவுணர்வுச் சாதனங்களூடாகப் பெறப்படும் தகவல்களை (செய்மதிப் படங்கள், விமானப்படங்கள், றடார் மூலம் பெறப்படும் சமிக்கைப் படங்கள்)ப் பயன்படுத்தி புவிமேற்பரப்பு அம்சங்களை இனங்கண்டு வகைப்படுத்தல் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. விமானப்படங்கள் மூலமாக ஏரிப் பிரதேசத் தின் நில உருவங்களை இனங்காணுதல் சாத்திமானது. மரபு ரீதியான ஆய்வு வேலைகளை இலகுவாக்குவதுடன் விரைவில் படமாக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த வகையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் உள்நாட்டு ஏரிப்படுக்கைப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்குரிய நிலவுருவங்களை இனம் காணும் முயற்சி இவ் ஆய்வின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இம்முடிவுகள் ஏரிப்பிரதேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பொருந்தக் கூடியது.