dc.description.abstract |
நாட்டார் வழக்காற்றியல் (Folklore) என்ற கல்விபுலமானது, பல்வேறு பகுப்புக் களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அவ்வாறான பகுப்புக்களில் "நம்பிக்கை'யும் (Belief) பிரதானமான ஒன்றாக அமைந்து உள்ளது. ஈழத்தமிழர்களிடையே வழக்கில் உள்ள நம்பிக்கைகள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இதுவரை முனைப்புப் பெறவில்லை என்றே கூறலாம். இவ்வாய்வு இத்துறை குறித்த ஓர் ஆரம்ப ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வுக் கட்டுரை நாட்டுப்புற மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள் பற்றியும், அவற்றின் அடிப்படை
கள்
பற்றியும், அவற்றின் பயில்நிலை முக்கியத்துவம் பற்றியும் நோக்குவதாக அமைகிறது. கட்டுரைக்குரிய ஆய்வுத்தரவுகள் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் (Field work) மூலம் பெறப்பட்டவையாகும். |
en_US |