dc.description.abstract |
அறிவியலில் முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்ற நன்மை, தீமை, உண்மை, இன்பம் போன்ற எண்ணக்கருக்கள் போலவே 'தண்டனை' எனு ம் எண்ணக்கருவும் அறிவியலுக்கு உடன்பாடாயமைந்து, விளக்குவ தற்கும், விமர்சிப்பதற்கும் சிரமமானதொன்றா கிறது. தண்டனை அறவியிலிலும், மெய்யிய லிலும் ஏனைய பிற சமூக விஞ்ஞானங்களிலும், சமயத் துறைகளிலும் அவ்வவற்றுக்குரிய கற்பிதப் பின்னணிகளோடு பல்வேறு வகைப் பட்ட ஆய்வியல் முறைமைகளுக்கு உட்படுத்தப் பட்டு அவற்றின் வழியால் அலசப்பட்டும் அணுகப்பட்டும் தொடர்வதொன்றாய் உள்ளது.
அறிவியல் சமயம் ஆகிய துறைகளில் தண்டனை பற்றிய நேர்க்கணிய நோக்குகள், அணுகுமுறைகள் விருப்புடன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. குற்றம் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட உலகவமைப்புக்கு எதிராக எழுகின்ற எதிர் நடவடிக்கைகளாகும் எனச் சமய நூல்கள் கருதுகின்றன |
en_US |