Abstract:
இலங்கையில் தமிழ்ப் பிராந்தி யத்தின் பாரம்பரிய வரலாறு
I முழுமையாக ஆராயப்பட வில்லை என்பதும், அவ்வாறான நோக் கில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்பதும், நீண்டகாலக் குறை பாடாக இருந்து வருகிறது. இதற்கு சிங்கள மக்களைப் போல் தமிழ் மக்களிடையே வரலாற்றை பேணுகின்ற மரபு வளர்ந்திரு க்கவில்லை என்றும், அரச மட்டத்தில் இலங்கையின் பிறபாகங்களில் மேற்கொள் ளப்பட்டது போன்ற வரலாற்று ஆய்வுகள் இப்பிராந்தியங்களில் மேற்கொள்ளப் படவில்லை என்றும் காரணங்கள் கூறப் பட்டு வந்துள்ளன. ஆயினும் அண்மைக் காலத்தில் இப்பிராந்தியங்களில் மேற்கொள் ளப்பட்ட ஒரு சில தொல்லியல் அகழ் வாய்வுகளும் (Excavations) தொல்லியல் மேலாய்வுகளும் (Expolorations) இப்பிராந் தியமும் இலங்கையில் தொடர்ச்சியான வரலாற் றைக் கொண்ட பகுதி என்பதை உறுதிப்படுத்த உதவின. இதற்குப் பூநகரிப் பிராந்தியமும் விதிவிலக்கல்ல என்பதை ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்த தொல்லியல் சின்னங்கள்
உறுதிசெய்கின்றன. தமிழ்ப் பிராந்திய த்தின் சில இடங்களின் வரலாற்றை அறிந்துகொள்ள பாளி, சிங்கள இலக்கிய ங்களும், பிற்காலத்தில் எழுந்த தமிழ் இலக்கியங்களும் ஓரளவு உதவு கின்றன. அத்தகைய இலக்கிய ஆதாரமெதுவும் பூநகரிப் பிராந்திய புராதன வரலாற்றை அறிய உதவவில்லை . ஆயினும் இங்கு குறுணிக் கற்காலம் முதற் தொட்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரைக்கும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தமையை யும், முக்கிய பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தமையையும் உறுதி செய்யும் தொல் லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.