Abstract:
இந்து மதத்தின் அறுவகைச் சமயநெறிகளுள் விஷ்ணுவை
முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்கும் வைணவ சமயமும் ஒன்றாகும். இன்றும் இந்தியாவின் பல் வேறு பகுதிகளிலும் வைணவ சமயத்தி னைப் போற்றிப் பின்பற்று பவர்கள் இருந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் விஷ்ணுவை வழிபடும் மரபு இருந்து வருகின்றமை கண்கூடு.
இப்பக்தி பற்றிய கருத்தினை நாரத பக்தி சூத்திரம் விரிவாகக் கூறுகின்றது. நாரத பக்தி சூத்திரத்தின்படி பக்தியானது குணங்குறியற்றது. அது பிரதிபலனை எதிர் பார்ப்பதில்லை; கணந்தோறும் மேலும் மேலும் பெரிதாக வளர்வது; அதில் இடையீடு இல்லை; அது நுண்ணிய திலும் நுண்ணியது; அது அனுபவத்திற்கு உரியது; பக்தியைப் பெறுகிறவன் பக்தியையே காண்கிறான்; அதையே கேட்கிறான்; அதையே பேசுகிறான். அதையே சிந்திக்கிறான்; பக்தர்கள் முற்றிலும் பகவான் மயமானவர்கள்; பக்தர்களுக்கிடையில் ஜாதி, கல்வி, உடல் அமைப்பு . குலம், செல்வம். தொழில் முதலியவைகளை முன்னிட்டுப் பேதமில்லை என விளக்கம் தரப்படுசிறது.