DSpace Repository

பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் :அமைப்பும் பிரச்சினைகளும்

Show simple item record

dc.contributor.author Krishnamohan, T.
dc.date.accessioned 2022-11-21T03:39:55Z
dc.date.available 2022-11-21T03:39:55Z
dc.date.issued 1995
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8549
dc.description.abstract உலகில் அரசியல், புவியியல் ரீதியாக வரையறுத்துக் கூறக் கூடிய ஒரு பிராந்திய மா தென்னாசியாவுள்ளது. மனித வளங்க ளையும், இயற்கை வளங்களையும் பெருமளவில் கொண்டுள்ள இப்பிராந் தியம் அபிவிருத்தியின்மை , வறுமை, கட்டுப்படுத்த முடியாத சனத்தொகை வளர்ச்சி போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. இப்பிராந்திய மக்கள் பொதுவான வரலாறு, கலாசார, மொழி, இன ஒற்றுமை போன்றவற்றினூடாக பொதுவான சமூகப் பெறுமானத்தினை கொண்டவர்களாகவும் காணப்படுகின் றனர். இக்காரணிகள் தென்னாசியாவில் ஐக்கியத்தினை ஏற்படுத்த போதுமானவை களாகும். இப்பிராந்தியத்தின் மைய அரசாக இந்தியா விளங்குகின்றது. பொதுவாக பிராந்தியக் கூட்டுக்கள் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் இதிலிரு ந்து விலகி உருவாக்கப்பட்ட அமைப்பாக சார்க் அமைப்பு: காணப்படுகின்றது. இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் தமது பொருளாதார கூட்டுறவினை வளர்க்க வும், சமாதானம், உறுதிப்பாடு, கலாசார அபிவிருத்தி, வாழ்க்கைத்தரம் என்பவ ற்றை பேணவும் ஒருமித்து செயற்பட முற்பட்டன. இதன் விளைவாகத் தோற்றம் பெற்றதே சார்க் அமைப்பாகும். இக்கட் டுரை இன்றிருக்கும் பிராந்திய சூழ்நிலை யில் சார்க் அமைப்பு எதிர் நோக்கும் பிரச்சினைகளையும், மேலாதிக்கப் போக் கினை தக்க வைத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் தந்திரோ பாயச் செயற்பாடுகளை யும் பரிசீலிக்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் :அமைப்பும் பிரச்சினைகளும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record