Abstract:
சங்கப் பாடல் தொகுதியினுள் மாறுபாடற்ற ஓர் ஒருமைத்
தன்மையைக் காண்பதிலும் அவற்றை வற்புறுத்துவதிலும் தொல் காப்பியம் முதலாம் இலக்கண நூல்களும் பிற்காலத்தில் வந்த பல்வேறு இலக்கிய வரலாற்று நூல்களும் அக்கறை செலுத்தி யுள்ளன வெனினும், சங்கப் பாடல் தொகு தியை உன்னிப்பாக ஆய்வுக்கு உட்படுத்து சின்றபொழுது, அப்பாடல் தொகுதியினூடே மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்படத்தக்க செல்நெறிகள் (trends - போக்குகள்) காணப் படுகின்றமையும், அச்செல்நெறிகள்,
இலக்கண மயப் படுத்தித் தரப்பட்டுள்ள பண்புகளிலிருந்து மேற்செல்லுகின்றன வாகவும் காணப்படுகின்றன என்பது பற்றிய கவிதையியற் சிக்கலும் ஏற்கனவே எடுத்துக்கூறப்பட்டுள்ளது (சிவத்தம்பி 1995). அத்தகைய ஒரு மாற்றச் செல்நெறி பத்துப் பாட்டுத் தொகுதியின் மூலம் எவ்வாறு புலப்படுகின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.