Abstract:
உலக நாகரிக வளர்ச்சியிலும் அறிவு விருத்தியிலும் ஐரோ
ப்பாவின் பங்களிப் பே பிரதானமானது என்ற வாதம் ஐரோப் பியமையவாதம் (Eurocentrism) எனப் பட்டது. இக்கருத்தின்படி ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட சகல ஐரோப்பிய மயப்படுத்தப்பட்ட நாடுகளுமே அறிவு, ஆக்கம், தொழில் நுட்பம், கலாசாரம் என்பவற்றின் தலைமை நிலைய மாகும். இந்நாடுகளிலிருந்தே இவையனைத்தும் ஏனைய வளர்ச்சி குறைந்த நாடுகளு க்குப் பரவின என்று வலியுறுத்தப் படுகின்றது.
வழங்கியுள்ள பங்களிப்பு பற்றிப் பல ஆய்வுகள் இன்று வெளிவந்துள்ளன. ஐரோப்பிய மையவாதமும் அதன் நாகரிகப் பண்புகளும் பரவுவதை எதிர்த்த ஏனைய மக்கள் கூட்டத்தினரு டைய கலாசாரங்களும் அழித்தொழி க்கப்பட்டமை பற்றியும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய அறிவுத் தொகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாக விருந்த கிரேக்க சிந்தனையும் தத்துவ அடிப்படையும் எகிப்து நாட்டின் கறுப்பு இன மக்களின் செல்வாக்குக்குட் பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஐரோப்பியமைய வாதம் எனும் சிந்தனையைக் கொண்டே ஐரோப்பியர்கள் தாம் உருவாக்கிய அடிமை முறையையும் குடியேற்ற ஆட்சி முறையையும் நியாயப்படுத்தினர் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.