DSpace Repository

சமய அறிவில் தமிழ்க் கல்வியின் பங்கு

Show simple item record

dc.contributor.author Kalaivani, R.
dc.date.accessioned 2022-11-21T03:23:54Z
dc.date.available 2022-11-21T03:23:54Z
dc.date.issued 1995
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8544
dc.description.abstract இறைவனுடன் தொடர்புடைய துறை சமயம் என்ற பெயரால் குறிக்கப்படும். மனித இனம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சமய உணர்வு, அறிவு இரண்டும் இருப்பதனைக் காணலாம். "சமையம் என்ற சொல் சமைக்கப்பட்டது அல்லது வகுக்கப்பட்டது எனப் பொருள் தரும்" சமைத்தல் என்றால் உணவினைப் "பக்குவப்படுத்தல்'' எனப்படும். பச்சை மாமிசம் உண்டு வேட்டைத்தொழில் புரிந்த ஆதிமனிதரை "நாகரிகமற்றவன்'' எனவும் சமைத்து உணவு உண்ணும் முறையறிந்து வளர்ந்த பிற்கால மனிதரை "நாகரிகமுடையவர்'' எனவும் மனிதப் பண்பாட்டு வரலாறு குறிப்பிட்டுள்ளது. உணவினைப் பக்குவப்படுத்தும் நெருப்பி னைப் போன்று மனித மனத்தினைப் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை அடைய வழிகாட்டும் நெறிமுறைகள் "சமயம்'' எனப் பெயர் பெற்றதெனலாம். ஆங்கிலத்தில் சமயத்தைக் குறிக்க Religion என்ற சொல் வழக்கிலேயுள்ளது. இச்சொல்லானது லத்தீன் மொழியில் உள்ள றெல்-இ ஜியோ (Rel-igio) என்ற சொல்லிலிருந்து அமைக்கப்பட்டது. மனிதனுக்கும் மனிதனுருள் உயர்ந்த ஒருவனுக்கும் இடையேயுள்ள தொடர்பி னைக் காட்டுவது என்பது இதன் பொருளாகும். 2 எந்தமொழியாயினும் எந்தச் சொல்லாயினும் இறைமையுடன் தொடர்பு கொள்ளும் நெறி ஒன்று உலகெங்கும் பரவியிருப்பதில் ஐயமில்லை . எல்லாச் சமயங்களும் இறைவனை மூலமாகக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத கொள்கைகளும் சமயம் என்ற பெயரும் சித்தாந்தம் என்ற பெயரும் தாங்கி நிலவவதனைக் காணலாம். உலகாயதம், பௌத்தம் முதலியன இத்தன்மை கொண்டவை யாகும். சமயத்தின் இறுதி வளர்ச்சியாக இறைவன் எல்லா உயிர்கட்கும் பொது என்ற எண்ணம் இவ்வாறு தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் en_US
dc.language.iso en en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title சமய அறிவில் தமிழ்க் கல்வியின் பங்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record