Abstract:
சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலக
ளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனை யாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப் பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசா யத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப் பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏது நிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது