Abstract:
முகாமைபற்றிய அனுபவத் திரட்டுக்கள் பின்னர் வரிவடிவில் பொறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுப்பின்னர் அவை ஒரு வகையான முகாமை முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டன.
இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னரேயே குறிப்பிட்ட நதிப்பள்ளத்தாக் கின் செழிப்பான வண்டல் மண் படுக்கை களில் மனிதன் இயற்கையை முகாமைத் துவம் புரியும் தனது வாழ்வினைத் தொடங்கி மேலாண்மையைத் தோற்றுவித் திருந்தான்.
திக்கரை நாகரிகங்கள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே நீர்ப்
பங்கீடு தொடர்பான முகாமையின் யாற்பட்ட அறிவுத்திரட்சியினை இயல்பா கப் பெறும் வாழ்வு உருவாக்கம் பெற்றது எனலாம். இயற்கை விடுத்த சவாலை எதிர்கொள்ள முனைந்த மனிதன் தனது அறைகூவலாக சில சாதனைகளைப் புரிய முற்பட்டான். அதன் விளைவு நதிகளின் போக்கிற்குக் குறுக்கே அணைக்கட்டுக்கள் உருவாகின; ஆற்றின் போக்கு இதனால் தடுத்து - கட்டுப்படுத்தப்பட்டது; கால் வாய்கள் மூலம் நீரைப் பங்கிட்டு விளை நிலங்களுக்கு நீர்பாய்ச்சப்படும் முகாமை முறைமை தோற்றுவிக்கப்பட்டது. வெள் ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணையின் நீர்ப்பூட்டுக்கள் திறந்துவிடப்பட்டு வெள் ளப் பெருக்கு தவிர்க்கப்பட்டது . சுட்ட செங்கட்டிகளின் உபயோகத்தின் மூலம் நீரினால் பாதிப்புக்குட்படாத வாழ்விடங் கள் மனைகள் உருவாக்கப்பட்டன. இவ் வாறு வாழ்வினூடே கண்டுகொள்ளப்பட்ட
வளமான வண்டல் மண் படுக்கை களில் வாழ்வு முறை செழிப்படைந் தமையைத் தொடந்து அவ்வாழ்க்கை முறையின் மையங்களாக நகரங்கள் பெரும் எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்பட்டிருந் தன.