Abstract:
இலங்கையில் சமயம், அர சியல் வன்முறை தொடர்
பான பேராசிரியர் ஸ்ரான்லி ஜே. தம்பையா அவர்களின், 'பௌத்தம் துரோகம் செய்தது' என்ற நூல் தடை விவகரரம், அரசியலிலும், அறிவுலகிலும் பரபரப்பூட்டிய விடயமா கும். உலகப் புகழ்பெற்ற மானுடவியல் அறிஞரான பேராசிரியர் தம்பையாவின் நூலை தடை செய்யக்கோரும் கண்ட னங்கள், தடை நடவடிக்கைகள் தொடர் பானதொரு மீள் ஆய்வாக இக்கட்டுரை அமைகின்றது.
அரசியல் கருத்துக்களை தணிக்கை செய் வது அல்லது தடைசெய்வது என்பது சாதாரணமானது. எனினும் விஞ்ஞான முறையியலின் வழியான ஆய்வு நூல் ஒன்றுக்கு தடை என்பது இலங்கையை பொறுத்தவரை முதல் அனுபவம். பேரா சிரியர் தம்பையாவின் இந்நூல், பௌத்த தேசிய வாதக் கருத்து நிலையை, மானு டவியலின் முழுதளாவிய அணுகுமுறையின் வழி (Holistic app! oach) விமர்சிப்ப து.