Abstract:
விஞ்ஞானக் கல்வியின் நோக்கம் விஞ் ஞானம் சாா தொழிலாளர், தொழில் நுட்பவியலாளர், ஆய்வாளர் போன் றோரை எமது சமூகத்தில் வளர்த்தெடுப் பதாக அமையவேண்டும். விஞ்ஞானத்தில் பல்வேறு கூறுகள் காணப்படினும் அவை ஒன்றுட ஒன்று தொடர்பு கொண்டு (ஒன்றிணைந்து) காணப்படுகின்றன. விஞ் ஞானத்தின் பிரதான கூறுகளாக தாவர வியல், விலங்கியல், பௌதிகம், இரசாய னம், வானியல், புவியியல் போன்றன காணப்படுகின்றன. இங்கு பெறும் தூய விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி விரிவு படுத்தியதாக விவசாயம், தொழில் நுட் பம், உயிர் நுட்பு, மருத்துவம் போன்ற பிரயோக விஞ்ஞானத் துறைகள் காணப் படுகின்றன. விஞ்ஞானமானது தனித்து நில்லாது விஞ்ஞான - தொழில் நுட்பம் என்ற வகையில் இணைந்து காணப்படு கின்ற போதே அந்த விஞ்ஞானத்தினால் பயன் கிட்டும். கல்வியும் அறிவைப் பெறு தல், பெற்ற அறிவைப் பயன்படுத்துதல் என்னும் இரு நிலைகளூடாக இணைந்து செயற்படும் போதே கற்ற அவ்வறிவால் அன்றாட வாழ்விற்குப் பயன் கிட்டுகின் றது.