DSpace Repository

மத்தியகாலத் தமிழ்நாட்டு இந்துக்கோயில்கள்

Show simple item record

dc.contributor.author Gunasingham, S.
dc.date.accessioned 2022-11-16T05:07:12Z
dc.date.available 2022-11-16T05:07:12Z
dc.date.issued 1976
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8533
dc.description.abstract மத்திய காலத் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் அமைப்பு, அவற்றின் கொமிற்பாடுகள் ஆகியவை பற்றிக் கவனிக்கையில் அக்கோயில்கள் அவற்றின் அமைப்பாலும் தொழிற்பாடுகளிலும் உச்சமடைந்த காலம் சோழப் பெருமன்னர் காலம் எனக் கொள்ளலாம். பல்லவர் காலம் தமிழ் நாட்டு வரலாற்றிற் கோயில் கட்டும் முயற்சியைப் பொறுத்துத் தொடக்க காலமாக இருந்தது. பெரும்பாலும் பல்லவர் காலத்தின் பெரும்பகுதியில் அளவிற் சிறிய கோயில்களே அமைக்கப்பட் டன. இதனால் இக்கோயில்களின் தொழிற்பாடுகளும் குறைவாகவே காணப்பட் டன. சோழர் காலத்திற் பல்லவர் காலக் கலைமரபின் வளர்ச்சியாகப் பெருங் கோயில்கள் பல தோற்றம் பெற்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட பெருங்கோயில் கள் அவற்றின் பொருள் பலத்திலும் தொழிற்பாடுகளிலும் உச்சம் பெறுவதற்குப் பல காரணிகளின் ஒன்றிணைவே காரணமாகும். பக்தியியக்கம் கொடுத்த பெரும் சமயவணர்வு நாட்டில் ஏற்பட்ட அரசியல் உறுதிப்பாடு, நாட்டின் பொருளா காரச் செழிப்பு ஆகியவை களே நாம் கருதுகின்ற காரணிகளாகும். சங்க மருவிய காலத்தின் (கி பி. 3-ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 6-ஆம் நூற்றாண்டுவரை) பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பக்தியியக்க நடவடிக்கைகள் பல்லவர் கால முழுப் பகுதியிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனால் இப்பக்தியியக்கம் பல்லவர் காலத்தில் எத்தகைய பெருவிளைவினையும் ஏற்படுத்த முடியவில்லை. பக்தியியக்க நடவடிக்கைகளினால் பல்லவர் காலத்திலேயே தமிழ் நாட்டிற் பல கோயில்கள் தோற்றம் பெறமுடிந்தாலும் அக்கோயில் கள் மக்கள் வாழ்வோடு தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. பக்தியியக்கத்தின் பெருவிளை வினைப் பல்லவர் காலத்தையடுத்து வந்த சோழர் காலத்திலேயே பெரிதும் காண முடி, தின்றது. இவ்விளைவு அரசு', மக்கள் வாழ்க்கை , கோயில் நிறுவனம் ஆகியவற்றுக் கிடையிலான தொடர்பினை இதற்கு முற்படத் தமிழ் நாட்டில் என்றுமில்லாதள விற்கு இறுக்கமாகப் பிணைத்தது. இதனை விட, வலிமையுள்ள மன்னர்கள் சோழப் பேராசிலே தொடர்ந்து சிலகாலப் பகுதியாகப் பதவி வகித்தமையால் சோழப் பேரரசில் அரசியல் உறுதிப்பாடும் அமைதியும் ஏற்படுவதற்கான சூழ் நிலை நன் சமைந்திருந்தது. அத்துடன், சோழப் பெருமன்னர்கள் இக்காலமளவில் மேற் கொண்டிருந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகள், பிற நாடு களுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அமைதியான சூழ் நிலையில் வணிகக் கணங்கள் எழுச்சி பெற்றுப் பரந்தளவில் அவை மேற்கொண்ட வணிக முயற்சிகள் ஆகியன நாட்டில் பொருளாதாரச் செழிப்பு ஏற்படுவதற்குத் துணை நின்றன. ஆகவே, நாட்டில் ஏற் பட்ட பொருளாதாரச் செழிப்பு. அரசியல் வசதிப்பாடு. பக்தியியக்கத்தின் பெரு விளைவினால் ஏற்பட்ட சமயவுணர்வு ஆகியவற்றின் கூட்டு இணைவே, இக்கால இந்துக் கோயில் கள் பல்வேறு அம்சங்களிலும் உச்சம் பெறக் காரணமாகியது en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title மத்தியகாலத் தமிழ்நாட்டு இந்துக்கோயில்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record