Abstract:
இந்திய மண்ணின் இன்றைய எரியும் பிரச்சினைகளிலொன்றின் இயக்க
'வடிவம் 'தலித்தியம்' . 'தலித்' என்ற மகாராஷ்டிர மொழிச் சொல் உடைக்கப்பட்ட - எடுக்கப்பட்ட - மக்கள் எனப் பொருள் தருவது. இச் சொல்லுக்கு 'மண்ணோடியைந்த மக்கள்' என இன் னொரு பொருளும் வழங்குவதாகத் தெரி கிறது பல நூறு ஆண்டுகளாக 'சாதியம் என்னும் ஒடுக்குமுறையால் ஒதுக்கப்பட்ட குறிப்பாகத் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதிப் புறக்கணிக்கப்பட்ட - மக்கட் சமூ கத்தை இச் சொல் சுட்டி நிற்கிறது . இம் மக்கட்பரப்பில் ஒரு பெரும்பகுதியினர் தமது 'சுய'த்தை - பல நூறு ஆண்டு களாகத் தாம் இழந்து விட்டதாகக் கருதப் படும் இயல்பான பண்பாட்டு முகத்தை - இனங்காணும் நோக்கில் மேற்கொண்டுள்ள இயக்க நிலைச் செயற்பாட்டின் வடிவமே தலித்தியம்.
செயற்பாடுகளின் தொடர்ச்சியாகச் சமூக பண்பாட்டுத் தளத்தில் முகிழ்த்த இயக்கம் இது. கடந்த நூற்றாண்டிலே, இந்திய சமூாத்தின் பல்வேறு குறைபாடுகளையும் ஒழிக்கும் நோக்கில் ராஜாராம் மோகன் ராய் (1732 - 1883 , தயாநந்த சரஸ்வதி (1824 - 1883 ) , இராமகிருஷ்ண பரமஹம் ஸர் ( 1836 - 1886 ), விவேகாநந்தர் (1863 - 1902) முதலியோர் வட இந்திய மண்ணில் செயற்பட்டு நின்றமையை அறி வோம். ஆயினும் அவர்களது சிந்தனை , செயன்முறை என்பன சமுதாயத்தின் அடி நிலை மாந்தரை - ஒடுக்கப்பட்ட மக்களை உரியவாறு சென்று அடையவில்லை . சமு தாயத்தின் மேல் மட்டத்தில் தான் அவை சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தின. இத்தகு சூழலில் சமுதாயத்தின் அடிநிலை மாந்தரி டயே விழிப்புணர்வையும் எழுச் சியையும் ஏற்படுத்தும் நோக்கின் வெளிப் பாடாக ஜோதிபா புலே, அம்பேத்கார் ஆகியோரின் சிந்தனை. செயன் முறை என்பன அமைந்தன. இந்திய அரசியல மைப்பின் சிற்பிகளுள் ஒருவரான அம்பேத் கார் அவர்கள் இந்துமதத்தில் நிலவிய தீண்டாமைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடியவர் : இந்துமதம் தீண்டாமையை ஒழிக்கத் தயாராக இல்லை என உணர்ந்த போது தனது உடன் கூட்டத்தினர் பல ருடன் பௌத்தமதத்துக்கு மாறியவர்.