DSpace Repository

19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும்

Show simple item record

dc.contributor.author Shanthiny, S.
dc.date.accessioned 2022-11-16T05:02:31Z
dc.date.available 2022-11-16T05:02:31Z
dc.date.issued 1976
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8530
dc.description.abstract பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாபெ ரும் மாற்றங்கள் அந்நாட்டு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளுக்கு புத் துணர்ச்சியையும், நவீனத்துவத்தையும் கொடுத்தன. முக்கியமாக இலக்கியத்தில் அது காலவரை உருவம், உள்ளடக்கம் பற்றிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஒதுக் கப்பட்டு, காலத்தைப் பிரதிபலித்துக் , காலத்துடன் இயைந்த இலக்கிய வடிவங் கள் தோன்றத் தொடங்கின. இக் கல்வி மாற்றங்களுள் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஆங்கிலக் கல் வியாகும் . '' மற்றைய எந்தக் காரணிகளையும் விட 19-ஆம் நூற்றாண்டு இந்தி யாவில் ஒரு பெரும் உருமாற்றத்தைக் கொண்டு வர உதவிய ஒரு தனிக்காரணிபைத் தெரிந்தெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் நாம் சிறிதும் தயக்கமின்றி ஆங்கி லக் கல்வியின் அறிமுகத்தைச் சுட்டிக் காட்டலாம்.'' | இந்தியாவில் ஆங்கிலக் கல்வியையும், அதன் பயனாக உண்டாகிய இலக்கிய மறுமலர்ச்சியையும் ஆராயுமிடத்து வங்கத்தில் நிகழ்ந்த கல்வி மாற்றங்கள், கல்வி சம்பந்தமான சர்ச்சைகள், விவாதங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஏறத் தாழச் சம காலத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அப்பகுதிகளிலும் கல்வி, இலக்கிய இயக்கங்கள் தோன்றி வளரத் தேவையான உந்து தலைக் கொடுத்தன. அதனால் வங்கக் கல்விச் சூழ்நிலையைச் சற்று விரிவாகவே ஆராய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ''ஹெலனிய கலாசாரத்தின் கல்விக் கூடமாக. கிரேக்கத்தின் கண் ணாக, கலைகளுக்கும் சொல்லாற்றலுக்கும் தாயாக எவ்விதம் பெரிக்கிளிஸ் காலத்து அதென்ஸ் நகரம் விளங்கியதோ அவ்விதமே பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிற்கு வங்கம் விளங்கியது.''2 இவ்வாறு அக்கால வங்கம் வகித்த முக்கிய இடத்தை சேர் ஜது நாத் சர்க்கார் விளக்கியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளம் பொருளாதார சுரண்டல், பஞ்சம், வெள்ளப்பெருக்கு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இத் தொடர்ச்சியான சமூக, பொருளாதார நலிவு கலாசார நலவுக்குக் காரணமாகவிருந்தது. 1760 (பாரத் சந்திர ராய் இறந்த வருடம் ) க்கும், 1800 (போட் வில்லியம் கல்லூரி யின் ஸ்தாபிதம் ) க்கும் இடையில் உள்ள காலத்தை வங்க இலக்கிய வரலாற்றாசி ரியர்கள் வங்க இலக்கிய வரலாற்றில் ஒரு வளர்ச்சி குன்றிய தேக்கமான காலமெ னக் குறிப்பிடுவர். இக்காலத்தில் கலையுணர்வு குறைந்த வைஷ்ணவ பக்திப் பாடல் களும், சரிதைகளும், கதைப்பாடல்களுமே பெருமளவில் இயற்றப்பட்டன. இதே இலக்கிய வளர்ச்சி குன்றிய சூழ் நிலை தமிழ் நாட்டிலும் ஐரோப்பியத் தாக்கத்திற்கு முன்பு நாயக்கர் காலத்தில் நிலவியது என்பதும் குறிப்பிடத் தக்கது 19-ம், 20-ம் நூற்றாண்டுகளில் இந்திய இலக்கியம் அடைந்த பிரமாண்டமான வளர்ச்சியை 18-ஆம் நூற்றாண்டு இலக்கியப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தான் ஆங்கிலக் கல்வியின் பங்களிப்பு எமக்குத் தெளிவாகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record