Abstract:
சமகால இந்திய மெய்யியலின் - தோற்றம், அதன் எண்ணக்கருக்
கள், அவற்றின் இயல்பு என்பன குறித்து அறிந்து கொள்வதற்கு வாய்ப் பாக இந்திய மெய்யியலின் அடிப்படை யாய் உள்ள கருத்துக்களையும், அவற்றின் இயல்பையும் புரிந்து கொள்ளுதல் அவசிய மாகிறது . இந்திய மெய்யியல் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தையுடையது என்பதும் முழுமையானது என்பதும், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் பொருந்துவது என்பதும் வெளிப்படை யானது -
தாஸ்குப்தா குறிப்பிடுகையில் 'சமகால மெய்யியலாய்வாளர்கள் மூத்த ஆசிரியர் களின் விளக்கவுரைகளுடன் முரண்பாடு கொள்ளாதவர்களாக - இசைவாகச் செயற்பட்டார்கள்' என்கிறார் 2 சிறீனி வாசறாய் இந்திய மெய்யியல் பாரம் பரியத்தில் எந்தவொரு மெய்யியலாளனும் புதுக்கருத்தொன்றை தான் வெளியிட்ட தாக அல்லது ஒன்றை புதிதாக கண்டு பிடித்ததாக உரிமை பாராட்டிக் கொள்ள வில்லை என்றும் ஏற்கனவேயுள்ள தர்சன நூல்களுக்கும் அவற்றின் வியாக்கியானங் களுக்கும் மேலும் விளக்கங்களை நல்கியது தான் தங்கள் பணியெனக் கருதினர். என குறிப்பிடுகின்றார். 3 இதை தவிர மேலும் சிலபல தேவைகள் சமகால இந்திய மெய் யியலின் பிறப்பிற்கும் அதன் செயற்பாடு களுக்கும் கால்கோலாக அமைந்தன.