Abstract:
சமுதாய வாழ்வை பிரதிபலிப்பனவே நாவலிலக்கியங்கள், அவை சமுதாய பிரச்சனைகளையும், அதன் முரண்பாடுகளையும் வெளிக்கொணருவனவாக அமைவது டன், தீர்வு மார்க்கங்களை முன்வைப்பனவாகவும் இருக்கும். நமது நாவலிலக்கியங் களைப் பொறுத்தவரை, இத்தகைய முயற்சிகள் பரவலாக காணப்பட்ட பொழுது , பிரச்னை சகளையும் முரண்பாடு களை யும் சரியானபடி இவை கண்டு கொள்ளவும், தீர்வு மார்க்கங்களை எடுத்துக் காட்டவும், தவறியனவாகவே பெரும்பாலான வை உள்ளன. அகிலன் , ராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி என்போர் களது படைப்புகள் இங்கு குறிப்பிடத்தக்கன . ராஜம் கிருஷ்ணனின் ''வேருக்கு நீர்'' அகிலனின் ' எங்கே போகிறோம்'' என்ற இரு நாவல்களும் இக் கட்டுரையில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.'
காந்தீயம். கம்யூனிசம் என்ற நேரெதிரான கொள்கைகளும், அவற்றின் விளை வான அரசியற் பார்வைகளும் காரணமாக எழும் முரண்பாடுகளுடன் கதை நிகழ்ச்சிகளை அமைத்துச் செல்லும் பாங்கு 'வேருக்கு நீர்', ' எங்கே போகிறோம்' என்ற நாவல்களிரண்டிலும் காணப்படுகிறது. எந்தவொரு கோட்பாட்டையும் மக்களிடை யே இலகுவில் பரப்பவும்; தன் கொள்கைக்கு மாறான கருத்துக்களை பற்றிய தப் பபிப்பிராயங்களை எவ்வித தருச்க நியாயமுமின்றி பரப்பவும் நாவல்கள் சிறந்த தொரு சாதனமாகிறது. இதற்கு மேற்கூறிய நாவல்கள் இரண்டுமே சிறந்த எடுத் துக் காட்டுக்களாகும். 2
காந்தீயம் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துடன் ''வேருக்கு நீர்'' கதை ஆரம்பமாகிறது. காந்தியக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவளான யமுனா, புரட்சிகர இயக்கங்களில் நம்பிக்கை கொண்ட சுதீர் , ஆச்சிரம ஆதரவில் வளர்ந்து பட்டம் பெற்று பின்னாளில் சமூக அந்தஸ்து பெற விரும்பும் துரைராசன், காங்கி ரஸ் தொண்டன் என்ற போர்வையில் அயோக்கியத் தனம் புரியும் இந்து நாத், என்போர்களே இக் கதையின் முக்கிய பாத்திரங்கள்.
புரட்சிகர அரசியல் இயக்கங்களிற்கு எதிராகவும், காந்தீயக் கொள்கைகளில் நம்பிக்கை இழந்தோருக்கு அதன் வலிமையை உணர்த்தவும், யமுனா காந்தீய இலட்சியங்களைப் பிரசாரம் செய்து வருகிறாள். யமுனாவை பயன்படுத்தி அரசியல் லாபம் தேட இந்து நாத் முயலுகிறாள். தனித்திருந்து வாழ முடியாது என்பதை உணர்ந்த யமுனா துரைராசனை மணம் புரிகிறாள். ஆனால் துரைராசனோ சமூக அந் தஸ்தை பெறும் விருப்பில் யமுனாவை பயன்படுத்திக் காரியமாற்ற முனைகிறான். யமுனாவிற்கு அது விருப்பமில்லாது போகவே அவர்களிடையே முரண்பாடுகள் தோன்றுகின்றன. இடையிடையே தி. மு. க. அரசியற் பிரசாரம் கல்கத்தா நகரின் அரசியற் குழப்ப நிலைகள் என்பன நாவலில் இடம் பெறுகின்றன.