Abstract:
பாட்ட யர்' ( Partitire ) என்ற பிரெஞ்சு மொழிப் பதத்திலி
ருந்து தோன்றிய கட்சி : (Party) என்ற ஆங்கிலப்பதமானது மூலப் பதத்தின் பிரகாரம் ‘பிரிப்பது' (to divide) என்ற பொருளைப் பெறுகிறது அதேசமயம் 'பாட்டோஜர்' (Partoger) என்ற பிரேஞ்சுப் பதத்துடனும் தொடர்புபட்டு கட்சி என்பது (அரசியல்) 'பங்குகொள்ளல்' (Partaking) என்ற பொருளையும் தருகிறது (அஷ்ரப்பும் சர்மாவும், 1992:56 ) இருப்பினும், பொது வாகக் கட்சிகள் என்பவை சமூகத்தைப் பிரித்து தேசமுன்னேற்றத்தைத் தடுக்கும் சக்திகள் என்ற அபிப்பிராயமே நீண்ட காலமாக நிலைத்திருந்தது. ஆரம்பங்களில் குறுகிய நோக்கங்களுடன் இயங்கி வந்த சமூகக் குழுக்களே பெரும்பாலும் கட்சி களாகப் பின்னர் பரிணாம வளர்ச்சி பெற்றமையும், கட்சிகள் பல்வேறு சமூகக் குழுக்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்தமையும் இதற்குக் காரணமாக இருந் திருக்கலாம். சொறொவ், { 1964 : 57 ). எப்ஸ்ரின் ( 1967 : அத் - 1.9 ) கிங் (1969 : 111 - 41 ), கீவ்ப் (1972 : 1 --6)