dc.description.abstract |
தமிழ் நாவல் வடிவின் பின்னணி :
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாற்றில் பல மாற்றங்க ளேற்பட்டன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் தமது தேவைகளுக்காக பல மாற்றங்களையும் புகுத்தினர், இதனால் இந்திய சமூக அமைப்பு மாற முற்பட் டது. விவசாயத்தையும் கிராமக் கைத்தொழில்களையும் கொண்டதாக இருந்த சமுதாயம் மேனாட்டாரது நவீன நாகரிகத்தையும் பொருளாதார அமைப்பையும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. இதுவரை சமூகத்தில் நிலவிய பழமையான மரபுகள் உடையத் தொடங்கின. இம்மரபுகளில் குறிப்பாக பெண்களைப் பற்றி யிருந்த கட்டுப்பாடுகள் தகரத் தொடங்கின. இந்நிலையில் நாவல் என்ற இலக்கிய வடிவமும் சமூகத்தில் அறிமுகமாகியது. மேனாட்டாரது வருகையால் தமிழில் வந்து புகுந்த இவ்விலக்கிய வடிவம் புனைந்துரைக்கும் பான்மையுடையதாக விளங்கிய தால் புதினமெனவும் பட்டது. சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களும் பரமார்த்த குரு கதை, விநோதரசமஞ்ஈரி போன்ற உரை நடை நூல்களும் கட்டப் பொம்மன், தேசிங்குராஜன் போன்ற கதைப் பாடல்களும், மதுரை வீரன், பழைய னூர் நீலி போன்ற நாட்டுப்புறக் கதைகளும் நொண்டி நாடகம், முக்கூடற் பள்ளு போன்ற நாடகங்களும், புனை கதை என்ற வகையைச் சார்ந்த இலக்கிய வடிவங்க ளாக இருந்தபோதும் நாவல் என்பது இவற்றினின்றும் முற்றிலும் வேறுபட்ட தொரு வடிவமாக அமைந்தது. அது வழி வழியாக வந்த மரபுகளையும் நெறிப் படுத்தப்பட்ட முறை களையும் மீறி அவற்றிலிருந்து வேறுபட்டு விளங்கியது. இப் போக்கு அக்காலத்திற்குப் புதுமையாகவும் இருந்தது. இப்புதுமைப் பண்பு நாவ லின் அடிப்படைப் பண்பாகவும் அதே வேளையில் சமூக சீர்திருத்தத்தினை வேண்டி நின்றவர்களுக்கு தமது எண்ணக்கருத்தினைப் பிரதிபலித்துக் காட்டுவதற்கேற்ற சாதனமாகவும் அமைந்ததெனலாம். |
en_US |