Abstract:
இன்று பாடசாலைகளிலே தமிழ்மொழியை மாணவர்கள் கற்பதற்கும் ஆசிரியர்கள் கற்பிப்பதற்குமென மொழிப் பாடநூல்கள் தராதரப்படுத். தப்பட்டு எழுதப்பட்டுள்ளன. தராதரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நூலி லும் உள்ள பாடப் பொருள்களும் பாடப்பொருள்களை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மொழியும், மொழி அறிவைத் தெளிவுபடுத்துவதற் கும் வளர்ப்பதற்குமென ஆங்காங்கே கொடுக்கப்பட்ட மொழிபற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும் ஏதோ ஒரு வகையில் தராதரப்படுத்தப் பட்டுள்ளன .
மொழி ஆசிரியர்கள் பெரும்பாலும் நூலில் உள்ள ஒரு பாடத்தை வகுப்பிலே முதற்கண் விளக்குகின்றனர். பாடத்தின் முடிவில் மொழி அறிவு', 'எழுத்து' எனும் பகுதிகளை விளக்கி மாணவரைக்கொண்டு பயிற்சிகளைச் செய்விக்கின்றனர். பயிற்சிகள் வாய்மூலமாகவோ எழுத்து மூலமாகவோ செய்விக்கப்படுகின்றன. பாடநூலுக்கு அப்பால் உள்ள பயிற்சிகளையும் மாண வர்கள் வகுப்பறையில் செய்கின்றனர். மாணவர்கள் மொழிப் பாடநூலை மட்டுமன்றி, சமூகக்கல்வி, சமயம், சுகாதாரம், விவசாயம், கணிதம், சித் திரம், சங்கீதம் போன்ற ஏனைய பாடநூல்களையும் படித்து எழுதுவதை யும் ஒரு வகை மொழிப் பயிற்சியாகவே கொள்ளுதல் வேண்டும்.
பொதுவாகக் கற்றல், கற்பித்தலில் பயிற்சிகளுக்கு (exercises) உரிய இடத்தை விதந்து கூறவேண்டியதில்லை. மொழிக்கல்வியில் பயிற்சிகள் மிக இன்றியமையாதவை. மொழி, பழக்கத்தால் கைகூடுவது. 'மொழி என் பது ஒரு சமூகப்பழக்கம் என்பர் மொழியியலாளர். மொழிப் பழக்கத்தைப் பயிற்சிகள் உறுதிப்படுத்த வல்லன. பயிற்சிகள் தராதரப்படுத்தப்பட்டவை யாக (graded) அமைந்திருத்தல் இன்றியமையாதது. மாணவர் பயிற்சி களின் பயனை அடைவதற்குப் பலகாரணிகள் மொழிக்கல்வியின் பின் னணியில் அமைந்துள.