DSpace Repository

ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம்

Show simple item record

dc.contributor.author Sivathampy, K.
dc.date.accessioned 2022-11-11T06:14:59Z
dc.date.available 2022-11-11T06:14:59Z
dc.date.issued 1984
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8500
dc.description.abstract ஒரு மொழியின் இலக்கியவரலாற்றினுள், அவ்விலக்கியத்தினுள் ஓர மிசமான கவிதைவரலாறு பெறும் இடம் யாது என்பது சுவாரசியமான ஒரு வினாவாகும். இத்தகைய ஒருவினா, இலக்கியவரலாற்றினுள் ஒவ் வொரு இலக்கிய வடிவத்திற்கும் தனித்தனி வரலாறு உண்டா என்ற இன்னொரு வினாவையும் உள்ளடக்கிநிற்கும். தற்கால உலகின் இலக்கியவெளிப்பாடுகளைப் பொறுத்தவரையில் இவ்வினா மேலும் முக்கியமாகின்றது. ஏனெனில், தற்காலத்தின் பண்பு களைச் சித்திரிப்பதற்கான தனித்துவச் சிறப்புடைய இலக்கியம் புனைகதையே (நாவல், சிறுகதை ) என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். அத்தகைய ஒரு நிலையிலும் கவிதை இலக்கியத்தின் வர லாறு அறியப்படல்வேண்டும் என்று கூறும்பொழுது, அவ்வரலாற்றி (னால் எத்தகைய அறிவினைப் பெறமுடியும் என்பது முக்கியமாகின்றது. பெலிக்கன் நூற்றொகுதியில் வெளிவந்த ஆங்கில இலக்கிய வரலாற் றின் இறுதிப்பகுதியான 'த மொடேன் ஏஜ்'' (The modern Age) என்னும் நூலில் (1961) வரும் இன்றைய கவிதை'' என்னும் அத்தியா யத்தில் அவ்வத்தியாயத்தை எழுதிய சாள்ஸ் ரொம்லின்சன் (Charles Tomlinson) (இவர் குறிப்பிடத்தக்க ஒரு கவிஞரும் விமர்சகரும் ஆவர்.) கூறியுள் ளது கவிதையின் முக்கியத்துவத்தை நன்கு எடுத்துக்காட்டுவதாகவுள்ளது. "கவிஞனின் கலை நம்மைப்பற்றிய உண்மையான அளவு மதிப்பீட்டினைத் தராவிட்டால், நாம் நம்மைச் சரிவர அறிந்து கொள்ள முடியாது''. இது இலக்கியப்பேருண்மை பொதிந்த ஒருவாசகம். உண்மையான கவி ஞனே தனது வாகனமாக அமையும் மொழியினைப் பேசும் கூட்டத்தின ரின் சமகால நிலைபற்றிய மதிப்பீட்டினைத் தருபவன் ஆவான். இவ்வமிசத் தில் கவிஞன் புனைகதையாசிரியனைவிட முக்கியமானவன். புனைகதையாசிரியன் சமூகப்பிரச்சினையுடன் தனிமனிதனை இணைத்து நோக்கி அந்தப்பின்னணியில் நமது சமூகவலு, வலுவின்மையைக் காட்ட, சிறந்த கவிஞனோ தனது சித் திரிப்புக்கள் மூலம் எமது அறவலுவையும் பண்பாட்டுவலுவையும் எடுத்துக் காட்டுகின்றவனாக அமைகின்றமையைக் காணலாம். "நாம் இன்றுள்ள நிலைமைபற்றிய தீர்க்கமான படிமத்தையும் நாம் எய்தவிரும்பும் அல்லது எய் தக்கூடிய நிலைமை பற்றிய தீர்க்கதரிசனமான படிமத்தையும் உண்மையான மஹாகவிகள் நமக்குத் தருகின்றனர்'' என ரொம்லின்சன் கூறுவது இவ் வண்மையை வலியுறுத்துகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record