DSpace Repository

கலை உலகில் அருகிவரும் ஸ்வரஜதியின் ஆரம்ப நிலையே ஜதிஸ்வரம்

Show simple item record

dc.contributor.author Karuna, K.
dc.date.accessioned 2016-01-22T04:20:06Z
dc.date.accessioned 2022-06-27T07:32:02Z
dc.date.available 2016-01-22T04:20:06Z
dc.date.available 2022-06-27T07:32:02Z
dc.date.issued 2014
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/849
dc.description.abstract தென்னக இசை என்கின்ற கர்நாடக சங்கீதத்தின் இரு கண்களாக விளங்குபவை கல்ப்பித சங்கீதமும், மனோதர்ம சங்கீதமும் ஆகும். கல்ப்பித சங்கீதம் என்பது இசை வல்லுனரால் முன்னரே இயற்றப்பட்ட அனைத்து இசை உருப்படி வகைகளையும் குறிக்கும். ஆரம்ப பாடங்களான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், மேல்ஸ்தாயி வரிசைகள், கீழ்ஸ்தாயி வரிசைகள், தாடடு; வரிசைகள், அலங்காரங்கள், கீதம், ஜதிஸ்வரம், ஸ்வரஜதி, வர்ணம் உட்பட கீர்த்தனை, கிருதி, பதம், ஜாவளி, இராகமாலிகை, தில்லானா ஆகிய அனைத்து இசைவடிவங்களும், கல்ப்பித இசையைச் சேர்ந்தவை. மனோதர்ம இசையில் இராக ஆலாபனை, தானம், நிரவல், கற்பனாஸ்வரம் என்பவை அடங்கும். இசைகளின் சேர்க்கை மனோதர்மத்தில் பல்லவியாகப் பாடப்படுகிறது. மனோதர்ம இசை அவரவர் பயிற்சிக்கேற்பவும், வித்துவத்திற்கேற்பவும் தத்தமது கற்பனையில் பாடப்படுகிறது. மேற்கூறிய கல்ப்பித இசையில் ஜதிஸ்வரம், ஸ்வரஜதி ஆகியன கீதத்திற்குப் பின்னர் கற்பிக்கப்படும் உருப்படிகளாகும். இவ் உருப்படிகளுக்கு உள்ள இலடச்ணங்களுக்கும் இவற்றின ;அமைப்புக்களுக்கும் நிறைய முரண்பாடுகள் காணப்படுவதால் சில வரையறைகளைக் கொடுப்பதே இவ் ஆய்வின ;குறிக்கோளாகும். நூல்கள் மூலமாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு முறைமை மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் இரு உருப்படிகளுக்கும், வேறு வேறு இலடச்ணங்கள் நூல்களில் காணப்பட்டாலும், ஒரே ஸ்வரதn;தாகுதி வேறு வேறு நூல்களில் ஜதிஸ்வரம், ஸ்வரஜதி என்று குறிப்பிடப்பட்டுள்ளமை, ஒரு ஸ்வரத் தொகுதி ஒரு நூலில் ஜதிஸ்வரம் என்றும், அதே அமைப்பு சாகித்தியத்துடன ;சேர்ந்து வேறு நூலில் ஸ்வரஜதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை, வேறு நூலில் ஒரு உருப்படியின் ஒரு அங்கமாக ஸ்வரஜதி அமைக்கப்பட்டுள்ளமை, ஏராளமான ஸ்வரஜதிகள் இருக்கின்றபோதும், ஓரிரு ஸ்வரஜதிகளே இசைப் பயிற்சியிலும், நாட்டியப் பயிற்சி, அரங்கிலும் பயன்படுத்தப்படுகின்றமை ஆகிய பிரச்சி னைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றிற்கு முடிவு காணும் முகமாக ஒரே ஸ்வர அமைப்பு ஜதிஸ்வரதத்pற்கும் ஸ்வரஜதிக்கும் கொடுக்கப்படலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் இவ் ஆயவு; மேற்கொள்ளப்படுகின்றது. en_US
dc.language.iso tamil en_US
dc.publisher Jaffna University International Research Conference en_US
dc.subject ஜதிஸ்வரம் en_US
dc.subject ஸ்வரஜதி en_US
dc.subject ஸ்வரம் en_US
dc.subject சாகித்தியம் en_US
dc.title கலை உலகில் அருகிவரும் ஸ்வரஜதியின் ஆரம்ப நிலையே ஜதிஸ்வரம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record